கான்ட்ராக்டர்களிடம் காசு பறிக்க ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தும் நக்சலைட்டுகள்!

கான்ட்ராக்டர்களிடம் காசு பறிக்க ஆர்டிஐ சட்டத்தை பயன்படுத்தும்  நக்சலைட்டுகள்!

ஜார்க்கண் டில் அரசு திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தை நக்சலைட்டுகள் பயன்படுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத் தில் மாநில, மத்திய அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தங்களை எடுத்திருக் கும் கான்ட்ராக்டர்களை மிரட்டும் நக்சலைட்டுகள், திட்டச் செலவில் 10 முதல் 15 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என கேட்பார்கள். தர மறுக்கும் ஒப்பந்ததாரர்களை சுட்டுக் கொன்று விடுவார்கள். இதற்கு பயந்த பலர், நக்சலைட்டுகள் கேட்கும் பணத்தை தந்து விடுவார்கள். அப்போது, திட்டச் செலவை குறைத்து சொல்லி கமிஷனையும் குறைத்து விடுவார்கள்.
sep 20 -Naxal-
பலர் இப்படி ஏமாற்றியதை தொடர்ந்து, திட்டத்துக்கான உண்மையான செலவுத் தொகை எவ்வளவு என்பதையும் யார் ஒப்பந்ததார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் நக்சலைட்டுகள். அவர்களின் ஆதரவாளர்கள் மூலம், எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன, கான்ட்ராக்டர் யார், திட்டச் செலவு எவ்வளவு என அனைத்து விவரங்களையும் ஆர்டிஐ மூலம் அரசிடம் இருந்தே பெற்று விடுவார்கள்.

பிறகு, யார் யார் எங்கு போக வேண்டும் என ஏரியா பிரித்துக் கொடுத்து விடுவார்கள். இந்த விவரங்களை எடுத்துக் கொண்டு துப்பாக்கி ஏந்திய நக்சலைட்டுகள் கான்ட்ராக்டரிடம் போவார்கள். கமிஷன் கேட்பார்கள். குறைத்துக் கொடுத்தால், ஆர்டிஐ விவரத்தை அவருக்கு எடுத்துச் சொல்லி, கமிஷனை கறாராக வாங்கி விடுவார்கள். ஜார்க்கண்ட் மாநிலம் டோர்பா காட்டுப் பகுதியில் சமீபத்தில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சலைட்டுகள் பயிற்சி முகாமில் இருந்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். காண்டி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 30 திட்டங்கள் குறித்தும் கான்ட்ராக்டர்கள், செலவுத் தொகை குறித்தும் ஆர்டிஐ விவரங்கள் இருந்துள்ளன.

கான்ட்ராக்டர்கள் தங்களை ஏமாற்றாமல் இருக்க இதுபோல் ஆர்டிஐ உதவியை நாட ஆரம்பித்துள்ளனர் நக்சலைட்டுகள். தராவிட்டால் தலையை தனியே எடுத்து விடுவார்கள் என கண்டி எஸ்.பி. தமிழ் வாணன் கூறியுள்ளார். அரசு திட்டங்கள் குறித்து கேட்கும் போது, தர முடியாது என மறுக்க முடியாது. யாருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு தொகை எனக் கேட்டுத் தான் பெரும்பாலான ஆர்டிஐ விண்ணப்பங்கள் வருகின்றன. நக்சலைட்டுகள் காசு பறிக்கத்தான் இதைக் கேட்கிறார்கள் எனத் தெரியும். இருந்தாலும் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது என தலைமை தகவல் கமிஷனர் டி.கே. சின்ஹா கூறியுள்ளார்.

RTI latest weapon in Naxalite hands to target contractors

*******************************************************************
The Maoists in Jharkhand are using proxies to file Right to Information applications to gather details about government projects in order to target businessmen and contractors for extortion. Cops have recovered RTI documents from a training camp of the People’s Liberation Front of India, once a faction of the CPI(Maoist), in Torpa forests, which have details of 30-odd government projects under Khunti district rural development agency, with names of contractors and estimated costs.

error: Content is protected !!