“காந்தி ஜாதி” கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

“காந்தி ஜாதி”  கோரிக்கை : நிராகரித்த சுப்ரீம் கோர்ட்

சேலத்தை சேர்ந்த காந்தியவாதி வேலு (86), உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘இந்துக்களில் 9,500 ஜாதிகள் உள்ளன. முஸ்லிம்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. நாட்டின் அடிமைத்தனம் நிலவியதற்கு ஜாதிதான் காரணமாக இருந்தது. ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.
supreme-court 17

supreme-court owl 17
கலப்பு திருமண ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஜாதி ரீதியாக சில சிக்கல்களை சந்திக்கின்றனர். அதனால் கலப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளுக்கு காந்தி என்ற ஜாதி பெயரை வழங்க வேண்டும். இது ஜாதி இல்லாத சமுதாயம் உருவாக உதவும்” என்று வேலு கூறியிருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “இந்த விஷயத்தில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் இது நல்ல நோக்கம் என்பதால், மனுதாரர் இது குறித்து மத்திய அரசிடம் முறையிடலாம் “என்றனர்.

Supreme Court, PIL, Gandhi caste
*****************************************************
A PIL by a freedom fighter seeking a direction to the Centre and state governments that children born to couples having inter-caste marriages be recognised under one caste “Gandhi” has been dismissed by the Supreme Court.

error: Content is protected !!