கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியாகாந்தி

கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் சோனியாகாந்தி

திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் உடல் நலக்குறைவால் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு பின் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் ஏற்கெனவே இருந்த அண்ணா சிலைக்கு அருகில் கலைஞர் சிலை அமைக்கப் படும் என்றும், அண்ணா சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என்றும் திமுக அறிவித்திருந்தது. இந்தச் சிலை திறப்பு விழாவில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டு சிலையை திறந்து வைப்பார்கள் எனவும் திமுக தெரிவித்தது.

அதன்படி சமீபத்தில் அண்ணா சிலை அப்புறப்படுத்தப்பட்டு, புனரமைக்கும் வேலை நடந்து இன்று காலை அவரது சிலை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் கருணாநிதி யின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. சரியாக மாலை 5.20 மணியளவில் கருணாநிதியின் சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, சோனியா மற்றும் ராகுல் காந்தி, இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் என பலரும் இந்தவிழாவில் பங்கேற்றனர்.

https://twitter.com/aanthaireporter/status/1074288445864857601

இதைத் தொடர்ந்து ஒய் எம் சி ஏ மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடந்தது

error: Content is protected !!