கதவைத் திறக்க சாவி தேவையில்லை.. மொபைலே போதும்!!!

கதவைத் திறக்க சாவி தேவையில்லை.. மொபைலே போதும்!!!

கதவைத் திறக்க இனிமேல் சாவியின் உதவி தேவையில்லை, நமது ஸ்மார்ட் போன் மூலமாகவே கதவை திறக்கும் புதிய அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளனர்.
tec nov 4
இனி ஹோட்டலில் ரூம் எடுத்தால் ரூம் கதவை திறப்பதற்கு சாவி தேவையில்லை. புதிய டெக்னாலஜியில் ஆப்ஸ் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போனின் மூலமே நமது அறையின் கதவை திறக்கலாம், மூடலாம். இந்த புதிய வசதியை அமெரிக்காவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Starwood Hotels என்ற நிறுவனம் உலகம் முழுவதும் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்த ஹோட்டலில் தற்போது புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஹோட்டலில் தங்க செல்லும்போது நமது மொபைல் போனில் புளூடூத் மூலம் ஒரு அப்ளிகேஷனை கொடுத்துவிடுவார்கள்.

இந்த அப்ளிகேஷனில் நம்முடைய அறை எண் மற்றும் அனைத்து விவரங்களும் இருக்கும் நாம் நம்முடைய அறை முன் நின்று, செல்போனை கதவருகே காண்பித்தாலே போது, ரூம் கதவு திறந்துவிடும், இதேபோல் கதவை மூடவும் செய்யலாம். இந்த புதிய டெக்னாலஜி மூலம் திருட்டு நடப்பதை 100% தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.தற்போது அமெரிக்காவில் உள்ள தங்களின் 10 கிளைகளில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தவசதி இந்த வருட இறுதிக்குல் உலகமெங்கும் உள்ள கிளைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!