கணித விஞ்ஞானி – ஸ்ரீனிவாச‌ ராமானுஜம்..!

கணித விஞ்ஞானி – ஸ்ரீனிவாச‌ ராமானுஜம்..!

முன்னுரை – உலகம் போற்றும் ஒரு பெரும் மேதையின் வாழ்க்கை 32 வயதுக்குள் முடிந்து போனது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் அத்தனை கணித விஞ்ஞானிகளுக்குமே ஒரு இழப்புதான். ஐ எஸ் டி / ஈ மெயில் / சாட்டிலைட் என்று எதுவுமே இல்லாத காலத்தில் கூட ஈரோட்டில் பிறந்த இந்த மேதை பல உலக கணக்கு விஞ்ஞானிகளுக்கு இவரது படைப்பு மலைப்பை தந்தது போக, இவரை எப்படியாவது நம் நாட்டுக்கு வர வைக்க வேண்டும் என ஆசையை தூண்டியவர்.

இந்த மேதைக்கு நம்ம கும்பகோணம் அரசு கல்லூரியில் இவரின் கணித திறமைக்காகவே இலவச உதவித் தொகையுடன் சீட் கிடைத்தும் கணித்தை தவிர பிற சப்ஜெக்ட்களில் ஃபெயில் ஆனதால் அந்த வாய்ப்பும் நழுவி போனது, அது மட்டுமின்றி ஹைட்ரோசீல் என்னும் விரை வீக்க நோய் வந்தும் தன்னால் சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் 3-5 வருடங்கள் கஷ்டபட்டு ஒரு மருத்துவர் இலவசமாய் அறுவை சிகிச்சை செய்தும் இவர் இறந்து போனது இரண்டே காரணங்கள் தான். சரியான ஊட்ட சத்து உணவு இல்லாமலூம், லிவர் இன்ஃபெக்ஷன் ஆகியும் முடிந்தே போனது இவரின் வாழ்க்கை 32 வயதுக்குள்.

விரிவுரை – ராமானுஜம் 22 டிசம்பர் 1887 ஆம் ஆண்டு ஒரு ஆச்சார்யமான ஐயங்கார் குடும்பத்தில் மாத சம்பளத்துக்கு புடவை கடையில் வேலை செய்யும் கே ஸ்ரீனிவாச ஐயங்காருக்கும், கோமளத்தம்மாளுக்கும் பிறந்தவர் – கும்பகோண சாரங்கபாணி தெருவில் வசித்த அந்த வீடு தற்போது அருங்காட்சியமாக உள்ளது. ராமானுஜம் பிறந்த ஒன்ற்ரை வருடத்தில் அவரது அண்ணன் சடகோபன் பிறந்து மூன்று மாதத்தில் இறக்க, சின்னமை ஊரெல்லாம் பரவ அதில் பலர் பலியாக பிழைத்த ஒன்று இரண்டு ஆட்களில் ஒருவர் தான் இந்த ஸ்ரீனிவாச ராமானுஜம்.

நான்கு வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்தவர் அடுத்து பிறந்த 2 குழந்தைகளும் மரித்து போக அவர் 5 வயதில் பள்ளியில் சேர்ந்த போது விதி வலியது என மேலும் சோகமாய் அவரின் பாட்டனுக்கு காஞ்சிபுரத்தில் வேலை போக திரும்ப்வும் கும்பகோணம். அதுவும் தெலுங்கு முதல் பாடமாக கொண்ட அரசு பள்ளியில் பின்பு காங்கேயன் பிரைமரி பள்ளிக்கூடம் திரும்பவும் குடந்தை என பந்தாடியது இவர் வாழ்க்கை. பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்த இவரை கண்காணிக்க இவரின் பெற்றோர் ஒரு காண்சிடபிளை கூட நியமித்தனர் என்றால் அது தான் உண்மை. ஒரு வழியாக தாத்தா பாட்டிக்கு பின் தந்தை வேலை நிமித்தமாக பிஸியாக இருக்க தாயின் மேற் பார்வையில் நன்கு ப்டிக்க ஆரம்பித்தவர் 10வது வயதில் ஜில்லாவிலே முதன் மாணவராய் வந்தவர் 11 வயதி உயர்ப்பள்ளிக்கு சேர்ந்த போது தான் அதிகாரபூர்வமான கணக்கான – formal mathematics கற்க ஆரம்பித்தார்.

அது கற்ற ஜோரில் சில மாதங்களிலே தன் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாய் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களின் பாடத்தை கரைத்து குடித்தார். அதன் பின்பு மேற்க்கு நாட்டு கணித மேதை எஸ் எல் லூனி எழுதிய அட்வான்ஸ் டிரிக்னோமெட்ரியை தொம்சம் செய்தார். அந்த புத்தகத்தை பேராசிரியர்களே புரிந்து கொள்ள கடினமான ஒரு காலம். அந்த புத்தகத்தை படித்த ஞானத்தில் 13 வயதிலே பல கணக்கு தீர்வுகளை கண்டுபிடித்தார். 14 வயதில் 1200 மாணவர்களின் தேவைகளை 35 ஆசிரியர்கள் வைத்து எப்படி தீர்வது என லாஜிஸ்டிக்ஸ் முறையை கண்டுபிடித்த போது பல அவார்ட்கள் / மெரிட்கள் அவருக்கு குவிந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையே கணக்கு தேர்வுகளை பாதி தேர்வு நேரத்தில் முடித்து 100/100 வாங்கி காட்டினார். அதுமட்டுமல்ல அட்வான்ஸ் ஜியாம்ன்ட்ரியும் அதில் புது முறை தீர்வுகளையும் இனம் கண்டு வெளி உலகிற்க்கு சொன்னவர். 15 வயதில் கியூப் முறையின் தீர்வுகளை போட்டு காண்பித்து பல கல்லூரி ஆசரியர்களை ஆச்சரிய உலகத்துக்கு அழைத்து சென்றார்.

இப்படி சிறு வயதிலே கலக்கி கொண்டிருந்தவர்க்கு ஆரம்பித்தது பிரச்சினை குயின்ட்டிக் குறையில் தீர்வை சாதாரண ஆட்கள் செய்ய முடியாத போது இவரும் செய்து அதில் தோல்வி கண்ட போது தான் உணர்ந்தார் நமக்கு இன்னும் கணித ஞானம் தேவை என்று. இதையடுத்து 16 வயதில் தன் நண்பர் உதவியுடன் லைப்ரேரியில் ஜி எஸ் கார்ர் எழுதிய – A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics புத்தகத்தில் 5000 தியராம்ஸ் இருந்தது. அதை இரவு பகலாக படித்து பின்பு ஒரே வருடத்தில் உலக புகழ் பெற்ற‌ பெர்னோலி எண்கள் (Bernoulli numbers)என்னும் சொந்த கணக்கு தீர்வை கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் 15 தசம புள்ளியில் யூளர் மேஷ்ரோனி கான்ஸடன்ட் என்னும் முறையில் இதை செய்த போது இந்தியாவில் அப்போது கணக்கு புலிகளாய் இருந்தவர்கள் ஏதோ புரியுது ஆனா புரியலைனு சொல்லி அவரை மெச்சினார்.

அப்போதுதான் கும்பகோணம் கல்லூரியில் உதவித்தொகையுடன் கிடைத்த கல்லூரியில் கணக்கை தவிர மற்ற பாடங்களி ஃபெயிலாக அவரை கல்லூரி நிர்வாகம நீக்க அதனால் ஒரு மாதம் வீட்டை விட்டு ஓடி போனார். அதன் பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து கணக்கில் ஜொலித்தாலும் கடைசி வரை பட்ட படிப்பை முடிக்க முடியாமல் போன காரணம் கணக்கை தவிர அத்தனையும் ஃபெயில். இத்தனைக்கும் இடையில் 22 வயதில் 10 வயது பெண்ணை மணந்தார். அதன் பின்தான் விரை வீக்கம் நோயினால் அவதிபட்டார். அப்போது அவருக்கு சிகிச்சை செய்ய காசு இல்லாமல் இருந்து அவதிபட்டவருக்கு ஒரு மருத்துவர் இலவசமாக அறுவை சிகிச்சை செய்த போது திரும்பவும் ஒரு வருடத்தில் தன் உடல் நிலை மோசமாக ராமானுஜம் தன் நண்பரான ராதாகிருஷன ஐயரிடம் இதை பச்சையப்பன் கல்லூரி சிங்கார முதலியார் அல்லது பிரிட்டன் நாட்டை சேர்ந்த எட்வர்ட்ஸ் என்னும் மதராஸ் கிரிஸ்டின் காலேஜ் பேராசரியரிடம் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்களிடம் சேர்க்குமாரு கூறினார். கொஞ்ச நாளில் உடம்பு சிறிதளவு தேறியதும் குடந்தையில் இருந்து அப்போது பிரான்சு அரசாய் இருந்த விழுப்புரத்துக்கு சென்றார்.

அப்போது ராமானுஜம் உதவி கலெக்ட்ராய் இருந்த ராமசாமி ஐயரை சந்தித்தார். அவர் தான் Indian Mathematical Society அரம்பித்தவர். அவர் இவரின் திறமையை கண்டு வியந்து மதராஸ் மாகணத்தில் உள்ள கணக்கியல் நண்பர்களுக்கு கடிதம் தந்து அனுப்ப பலர் இவர் திறமையை உணர்ந்து அப்போது நெல்லூருக்கு கலெக்டராய் இருந்த ராமசந்திர ராவ் Indian Mathematical Societyயின் காரியதரியும் ஆவார். ராமச்சந்திர ராவ் இவர் திறமையை கண்டு வியந்தாலும் இவர் தான் இதையெல்லாம் செய்ய முடிந்ததா என்று சந்தேக கண்ணோடு பார்த்தார். இதன் பின்பு பல பேராசிரியர்களிடம் தன் திறமையை காண்பித்தவர் என்ற முறையில் ப்லர் இவருக்கு சான்று அளிக்க ஒரு வழியாக ராமசாமி அய்யரின் உதவியோடு முதல் ஜர்னலை Indian Mathematical Societyக்கு கொண்டு வந்தார், 25 வயதில் அக்கவுன்ட்டட் ஜெனரல் அலுவலகத்தில் மாதம் 20 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக வேலை ஒன்றை பெற அடுத்து சென்னை துறைமுகக்கழகத்தில் தலைமை கணக்காளராக அப்ளை செய்தார் அதில் நான் கணக்கு நன்கு கற்றவன் ஆனால் என்னால் டிகிரி முடிக்க முடியவில்லை ஆனாலும் என் திறமையை வெளிக்காட்டுவேன் என்று தெரிவித்த போது இவருக்கு மிடில் மாஸ்ட் என்னும் பிரிட்டிஷ் பேராசரியர் அப்போது பிரசடன்ஸி கல்லூரியில் ஒரு சிபாரிசு கடிதம் கொடுக்க இவருக்கு கிடைத்தது.

கடை நிலை கிளார்க் வேலை 30 ரூபாய் சம்பளத்தில். தன் வேலையை குறிபிட்ட நேரத்துக்கு முன்னமே முடித்தவுடன் கணக்கு ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார். அப்போது அவரின் உயர் அதிகாரி ஆன சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் / நாரயண ஐயர் மற்றூம் டிரஷரர் இவரின் மேல் ஆராய்ச்ச்சிக்கு உதவி அது மட்டுமில்லாமல் இவரின் கணக்கு தீர்வுகளை பிரிட்டன் கணக்கியல் விஞ்ஞானிகளிடம் சமர்பித்த போது எம் ஜே எம் என்னும் ஹில் யுனிவர்ஸிட்டி ஆஃப் லன்டனி பல்கலைக்கழகம் இதில் நிறைய ஓட்டைகள் உள்ளன என தெரிவித்தனர்.

இதற்க்கு காரணம் இவரின் அடிப்படை கல்வி ஞானம் இல்லை என்று இவரை மேல் படிப்புக்கு சேர்த்து கொள்ள முடியாது என தெரிவித்தார். அத்துடன் சோர்வடையாமல் தன் பிரஷன்டேஷனை கேம்பிரிட்ஜுக்கு அனுப்ப உதவியது இதே எம் ஜே எம் தான். பின்பு இதை கணித பேராசிரியரான பேக்கர் ஹாப்ஸன் அவர்களுக்கு அனுப்பிய போது ஒரு கமென்ட் இல்லாமல் திரும்ப வந்தது.

திரும்பவும் விடாமுயற்சியோடு தன் பெயர் போடாமல் ஒரு பெயர் தெரியா கணக்காளர் என்று ஒன்பது பக்க ஆய்வை ஹார்டி என்ற கணித மேதைக்கு அனுப்ப அவர் பார்த்த உடன் இது கண்டிப்பாய் பிராடு வேலை என நினைத்தார். பின்பு அதை நன்கு கூர்ந்து ஆய்வு செய்த போது அதில் பலது புரியாமல் போனாலும் ஒரு தீர்வை அவரை ஆச்சர்யத்தில் உறைய வைத்தது. இன்னொரு தீர்வை பிரிட்டிஷ் கணக்காளர் ஏற்கனவே செய்திருந்தார். அவர் பின்பு இது உண்மையான ஆராய்ச்சி தான் இதில் பிராடு இல்லை என்பதை தெரிவிக்கும் முன் லிட்டில் வுட் என்னும் இன்னொரு மேதைக்கு அனுப்ப அவரும் இதை பார்த்து மிரண்டு போனார். பின்பு ராமானுஜத்திர்க்கு “a mathematician of the highest quality, என்று பதில் அனுப்ப அவரின் இன்னொரு பேராசிரியர் நெவில் – could have been set in the most advanced mathematical examination in the world” என்று கூறினார்.

ஹார்டிக்கு இவரை லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்துக்கு வருமாறு செய்தி அனுப்பியும் குடும்ப சூழ் நிலை , பிராமின் கல்ச்சர் மற்றும் ஏழ்மை காரணமாக இவர் போகமாட்டேன் என்று கூறியபோது அவருக்கு மேல் ஆராய்ச்சி செய்ய மாதம் 75 ரூபாய் சம்பள உதவி ஆயுளுக்காக தருகிறேன் என்று கூறியவரை டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் பேராசரியர் கில்பர்ட் வாக்கர் இது ஒரு கணக்கு உலக அதிசயம் என கூற ஹார்டி இவருக்கு நிறைய பிரஷர் கொடுத்து அவரின் தாயிடம் பேசி ஒரு வழியாக 1913 ஆம் ஆண்டு நெவாஸா என்னும் கப்பலில் ஒரு மாத பயண்த்துக்கு பிறகு லண்டன் சீமைக்கு போய் சேர்ந்த உடன் அவரை வரவேற்றது அதே நெவில் தான்.

பின்பு ஹார்டி / லிட்டில் உட் உடன் சேர்ந்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். நெவேல் வீட்டிலே ஆரம்பத்தில் தங்கியவர் 120 தியரம்களை கன்டுபிடித்து ஹார்டியிடம் ஒப்படைத்த போது அவர் முகம் சுருங்கியது, ஏன் என்றா பாதிக்கு மேல் ஏற்கனவே புத்தகத்தில் வந்திருந்தது தான் மிச்சம் உள்ளவை புதிய முறை தீர்வுகள். லிட்டில் உட் இவர் ஜெர்மன் கணித மேதை ஜேக்கபி போன்ற்வர் என கூற ஹார்டியோ கணக்கு பிரம்மா யூளரோடு ஒப்பிடபட வேண்டியவர் எனா கூறினார்.
ravi ramanujar 2
இருந்தாலும் இந்தியாவில் டிகிரி முடிக்க முடியாமல் போனவர் 1916 ஆம் ஆண்டு பி ஏ ரிஸர்ச் டிகிரி (தற்போதைய பி ஹெச் டி எனப்படும் டாக்ட்ரேட்) வாங்கியது மட்டுமில்லாமல் 1918 ஆம் ஆண்டு ஃபெல்லோ ஆஃப் டிரின்ட்டி காலேஜ் கேம்பிரிட்ஜாக தேர்ந்து எடுக்கபட்ட முதல் இந்தியர் ராமானுஜம் தான். ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டியின் இரண்டாவது இந்தியரும் இவர்தான்.

அதே சமயம் அதிக மன அழுத்தம் / முதல் உலகப்போரினால் காய்கறி கிடைக்காமல் அதிக நாள் பட்டினி இருந்தமையால் காச நோய் வயப்பட்டார். பின்பு இந்தியாவுக்கு வந்து 32 வயதில் சென்னையில் இருந்த சேத்துபட்டில் மரணம் அடைந்தார். அவர் மனைவி 1994 ஆம் ஆண்டு வரை உயிரோடு இருந்தவர். இவர் மட்டும் இன்னும் பல ஆண்டுகள் சேர்ந்து இருந்திருந்தால் இன்னும் பல கணக்கு தீர்வுகள் கிடைத்திருக்கும் என்று இன்றும் உலக கணித விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தமிழ்ன் ஒருவனை இன்னும் இந்த உலகம் நினைக்கின்ற இவர் ஒரு அதிசய பிறவி. இன்று National Mathematics Day in India என்று இந்தியா கொண்டாடுகிறது.

(22nd Dec 1887 – 1920 I received a gift for this season and when i opened i saw a book named – “Collected Papers of Srinivasa Ramanujan” published by American Mathematical Society – Thanks and i read his biography his struggles and his achievement in just ONE GO. Today – National Mathematics day in India on account of Ramanujam’s Birthday. Whoever sent this book thanks once again and FYI please note i am a below average student in Maths.)

error: Content is protected !!