ஓரினச் சேர்க்கை :சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மத்திய அரசு அதிருப்தி!

ஓரினச் சேர்க்கை :சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு மத்திய அரசு அதிருப்தி!

“ஓரினச் சேர்க்கை சட்டவிரோத குற்றம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.இதனிடையே ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க எல்லா சாத்தியக் கூறுகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.மேலும் இதே தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இது நம்மை 1860 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டது எனறும் இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ‘கியூரேட்டிவ்’ மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .
same sex owl 12
அண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 377ன் படி, ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் ஓரினச் சேர்க்கை சட்டப்படி தவறில்லை என்று 2009ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளபோதிலும், இந்த தீர்ப்பு தனிமனித உரிமை மற்றும் விருப்பங்கள் சார்ந்தது என்றும், எனவே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட நாள் கறுப்பு நாள் என்றும் ஓரின சமூகத்தினரும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இந்த தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தவறி, மெத்தனப்போக்குடன் நடந்துகொண்டதாகவும், இனியும் கூட இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து மத்திய அரசு ஒரு முடிவை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுதலை தண்டனைக்குரிய குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 377-ஐ டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கி வெளியிட்ட தீர்ப்பை அவர் வரவேற்றுள்ளார்.

அத்துடன் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என அறிவிக்க அனைத்து சாத்தியக் கூறுகளையும் அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.இதனிடையே மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமக்கு மிகவும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ‘கியூரேட்டிவ்’ மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இவ்விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மறு ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும், பரஸ்பரம் சம்மதத்துடன் 2 வளர்ந்த நபர்களிடையே நடைபெறும் உறவை சட்டப்பூர்வமாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!