ஓரினச்சேர்க்கை குற்றமே: சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய மறுப்பு!

ஓரினச்சேர்க்கை குற்றமே: சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்ய மறுப்பு!

ஓரினச்சேர்க்கை குறித்த சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஓரினச் சேர்க்கை குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
supreme-court owl 17
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதில் குற்றம் ஏதுமில்லை. பரஸ்பரம் சம்மதத்துடன் தனிமையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் உறவு கொள்வது தவறில்லை என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பளித்திருந்தது.இதை எதிர்த்து சமூக நல, மத அமைப்புகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.மேலும் நாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் உள்பட ஓரின சேர்க்கை ஆர்வலர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றில்,”டெல்லி ஐகோர்ட்டு, ஓரின சேர்க்கையை சட்டரீதியாக ஆக்கியதால், ஓரின சேர்க்கை பிரியர்கள் தங்களைப் பற்றிய அடையாளத்தை கடந்த 4 ஆண்டுகளாக வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் அவர்கள் வழக்கு தொடரப்படும் அபாயத்தில் சிக்கி உள்ளனர். எனவே, அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், சட்டரீதியான தவறுகள் உள்ளன. சட்டம் தவறாக பிரயோகிக்கப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த தவறுகளை சரிசெய்ய வேண்டும். ஓரின சேர்க்கையை கிரிமினல் குற்றம் ஆக்குவது ஓரின சேர்க்கை பிரியர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் ஆகும்.மேலும், அவர்களின் ஆரோக்கியத்துக்கான உரிமையை மீறும் செயலும் ஆகும். அவர்கள் எச்.ஐ.வி. தடுப்பு சிகிச்சை உள்பட எந்த சிகிச்சையும் மேற்கொள்ள முடியவில்லை. இந்த கருத்தை மத்திய சுகாதார அமைச்சகமும் இந்த கோர்ட்டில் ஆதரித்துள்ளது. என்று மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இதே போல், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Supreme Court refuses to review verdict criminalising gay sex
********************************************************************************
The Supreme Court on Tuesday refused to review its verdict declaring gay sex an offence punishable up to life imprisonment. The apex court was hearing petitions filed by Centre and rights activists seeking review of its verdict.

Related Posts

error: Content is protected !!