ஒரு மில்லி மீட்டர் தடிமனில் உள்ள டி.வி -. விலை ஜஸ்ட் 15.75 லட்சம்தான்! வீடியோ

ஒரு மில்லி மீட்டர் தடிமனில் உள்ள டி.வி -. விலை ஜஸ்ட் 15.75 லட்சம்தான்!  வீடியோ

நம் வாக்கையின் அங்கமாகி விட்ட தொலைக்காட்சி பெட்டிகளில் தினந்தோறும் பலவிதமான நவீன தொழில்நுட்ப மாற்றங்களை புகுத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியியலாளர்கள் கண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நவீன தொலைக்காட்சி பெட்டியை உருவாக்கி இருந்தார்கள்.
LG TV
அதாவது இதற்காக தொலைக்காட்சி பெட்டியின் முன்பு விசேஷ கருவி ஒன்று இருக்கும். நாம் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அமர்ந்து கண்ணை சிமிட்டினால் போதும் தொலைக்காட்சி உடனே இயங்கும். சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது அல்லது குறைப்பது, மின்சார சப்ளையை நிறுத்துவது போன்றவையை செய்ய முடியும்.

இந்த பணிகளை செய்ய ஒரு குறிப்பிட்ட கண் சிமிட்டலுக்கு அளவுகோல் நிர்ணயித்து இருக்கிறார்கள். மற்றபடி வழக்கம் போல நிகழ்ச்சிகளை காணலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார்கள்.

அந்த வீடியோ இதோ:

இதனிடையே எல்.ஜி. நிறுவனம் ஒரு மில்லி மீட்டர் தடிமனில் புதிய டி.வி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த டி.வி.யை சுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரியாவில் நடந்த வணிக நிகழ்வு ஒன்றில் இந்த புதிய டி.வி. அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒ.எல்.இ.டி. என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த டி.வி.யின் மொத்த எடை வெறும் 1.9 கிலோ கிராம் தான். தற்போது மார்க்கெட்டில் இருக்கும் எல்.ஜி.யின் மெல்லிய வகை டி.வி. 4.4 மீல்லி மீட்டர் தடிமன் கொண்டதாகும்

இப்போது இருக்கும் டி.வி.களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த மின்சாரமே இதற்கு போதுமானது. இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டில் டி.வி.யை பொறுத்திக்கொள்ள முடியும், தேவை ஏற்படும் போது ஸ்டிக்கரை உறித்து எடுத்துக்கொள்ள முடியும். இதன் ஒரே ஒரு குறை 77-இன்ச் டி.வி.யின் விலை 15.75 லட்சம் என்பது தான்.

இதன் வீடியோ ரிப்போர்ட்:

https://www.youtube.com/watch?v=3hRFT3JM3_Y

error: Content is protected !!