ஒண்டிக்கு ஒண்டி! – விஜயகாந்த் அறிவிப்பு

ஒண்டிக்கு ஒண்டி! – விஜயகாந்த் அறிவிப்பு

வரவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை விஜயகாந்த் வெளி யிட்டார். முன்னதாக கூட்டணிக்காக யாருடனும் பேரம் பேசவில்லை எனவும்,கூட்டணிக்காக தேடி வந்த கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
dmdk mar 10
இன்னிக்கு சென்னை ராயப்பேட்டையிலே டி எம் டி கே. மகளிரணி கூட்டம் நடந்திச்சி.ஆரம்பத்திலே அக்கட்சியோட மகளிரணி தலைவியான பிரேமலதா விசயகாந்த் பேசும் போது, ”இங்கே கூடிய, கூட நினைச்ச, கூட முடியாத எல்லா பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள். உலக மகளிர் தினத்தில் பெண்கள் பற்றி பேசியாக வேண்டும். மகளிர் தினத்தில் சிறந்த மகளிர் அணி கொண்ட கட்சியாக தேமுதிக இருக்கிறது. அதற்குக் காரணம் ராணுவக் கட்டுப்பாட்டோடு கட்சியை வழிநடத்தும் விஜயகாந்த்தான். இங்கே பளபளக்கும் குடங்கள் , அடுக்கி வைக்கப்பட்ட புடவைகள், இலவசப் பொருட்கள், பிரியாணி என எதுவும் இல்லை. ஆனால், இவ்வளவு பேர் கூடி இருப்பதற்கு அன்புதான் காரணம்.இப்போதைய அதிமுக ஆட்சி சாதனை ஆட்சின்னு பிரம்மையை உருவாக்கறாஙக்ச். ஆனா ஜெயலலிதா உண்மையிலே போலீஸ், பிரஸ், பன்னீர் செல்வம்-ங்கற 3 பியை வைச்சிதான் ஆட்சி செய்றார். அத்தோட110 விதி, 144 ன்னு நம்பர்களை வைச்சி ஆட்சி செய்றார். இத்தனைக்கும் தமிழகத்துலே பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேறாத சமயத்தில் 50% உள்ளாட்சியில் வாய்ப்பு தருவதாக சொல்லி யிருக்கிறார். அனா.. ஜெயலலிதா சொன்னது எதுவும் நடக்கவில்லை. இது வரைக்கும் 110 விதியின் கீழ் ஜெயலலிதா சொன்ன எல்லாம் அறிவிப்புகளாகவே உள்ளன.

ஆனா நம்ம தேமுதிகவின் தற்போதைய இலக்கு பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்குவது தான். அடுத்த இலக்கு 50%. இதுக்கிடையிலே 2016 தேர்தலில் விஜயகாந்த் என்ன அறிவிக்கப் போகிறார்? 3 மாசமா தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நம்ம கட்சி கூட்டணி அறிவிக்கற்கு முன்னாடி, இந்த ஜெயலலிதா 234 தொகுதி வேட்பாளர்களை அறிவிக்க முடியுமா? இதை நான் சவாலாவே கேக்கிறேன்.உண்மையைச் சொல்லணும் னா ..வாய் மூடி மௌனியா பேச திராணியத்து, முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கிறார் இப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

நம்ம கேப்டன் தயவு இல்லாததால்தான் வேட்பாளர் பட்டியல் கூட அதிமுகவால் வெளியிட முடியல்லை. ஜெய லலிதா என்றாலே மாயை. அந்த மாயை இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகுது? அந்த சாயம் வெளுக்கப் போகுது. வரப் போற தேர்தல் முடிவுகள் மூலம் ஜெயலலிதாவுக்கு பூஜ்ஜியம் போட்டு பாடத்தைப் புகட்டுவார்கள்.

வெட்டியா.. எலெக்சன் நேரத்தில்தான் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். நான்கரை வர்டுஷஙகளா என்ன செய்து கொண்டு இருந்தார்?இந்த ஜெயலலிதாவும், கருணா நிதியும் அடுத்தவர்கள் மேல் பழியைப் போடுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவுக்கு தேவை தேர்தல். ஓட்டு. மீண்டும் ஆட்சியில் அமர்ந்து ஊழல் செய்து தமிழகத்தை சுடுகாடு ஆக்கணும் என்பதுதான் ஜெய லலிதாவின் எண்ணம்.

அத்தோஆ மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை, செம்மரக் கடத்தல் கொள்ளை என திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்கின்றன. இரண்டு கட்சிகளுஏஏ வளர்ச்சியை ஏற்படுத்தலை. காவிரி பிரச்சினை. விவசாய பிரச்சினை, நெசவாளார், அரசு ஊழியர்கள், முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சினை என எதற்கும் தீர்வு காணாத ஆட்சி ஜெயலலிதா ஆட்சி.பெண் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விஷ்ணுபிரியா மரணம், எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலையா? கொலையா? என்று கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர்.மக்களுக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்கவில்லை.

போன தடவை வந்த மழை வெள்ளத்தால் மக்கள் பரிதவித்ததற்கு யார் காரணம்? தொலைதொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிற முதல்வரைக் கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன் இல்லாத ஆட்சி இது.வெள்ள நிவாரணமாக எல்லோருக்கும் ரூ.5000 கொடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது முழுமையா கொடுக்கப்படலை. இந்த 5 ஆயிரம் ரூபாய் ஜெயலலிதாவின் சொந்தப் பணமோ, கட்சி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பணமோ இல்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிவாரணத் தொகை. ஆனால், இதுவே 40 லட்சம் மக்களுக்கு கிடைக்கல்லை.

அத்தோட பசுமை வீடு கொடுப்பதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால், ஒருவருக்குக் கூட வீடு கட்டித் தரவில்லை. அதிமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்குகிறது.நமக்கு வறுமை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும். அந்த வறுமையை விரட்டி அடித்து கல்வி, வேலைவாய்ப்பை வழங்குவது தேமுதிகவின் பொறுப்பு.இதுக்கிடையிலே ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஆட்சியில், பிறந்த நாளில் சிலர் பச்சை குத்துவதை அமைச்சர்கள் பார்த்து சிரிக்கிறார்கள். பச்சை குத்திக்கொள்ள வந்த அத்தனை பெண்களும் அழுதார்கள். அமைச்சர்களை முதுகெலும்பில்லாதவர்கள் ஆக்கியதுதான் ஜெயலலிதாவின் சாதனை.

ஒரு விஷயம் தெரியுமா? எம்ஜிஆர் அதிமுக என்று அதிமுக கட்சி உடைந்து இரண்டாவது கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தி எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நிமிர்ந்திடு தலைவா, குனிந்திடு போதும் என்று பேனரில் போடுகிறார்கள். வினை விதைத்த ஜெயலலிதா வெகுவிரைவில் அதை அறுவடை செய்வார்.

ஜெயலலிதா சாதனை ஆட்சி என்கிறார். இது வேதனை ஆட்சி. தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் சிக்கி இருக்கிறது. திமுக என்றாலே தில்லுமுல்லு. அதிமுக என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு.முழுப் பக்க விளம்பரம் கொடுத்துவிட்டால் பெரிய கட்சியா? அதிமுக சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி உள்ளது. 2ஜி பிரச்சினையில் திமுக சிக்கியிருக்கிறது. பாமக இட ஒதுக்கீடு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. ஆக திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளையுமே தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உண்மையில் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சியை தேமுதிக அமைக்கும்.தமிழகத்தில் 94 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும். இப்போ ஜெயலலிதாவுக்குப் பிடித்ததை கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. அது கருத்துத் திணிப்பு.தேமுதிக யாரிடமும் பேரம் பேசவில்லை. 5 பைசா கூட யாரிடமும் விஜயகாந்த் வாங்கவில்லை. பேரம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் கூட எங்களுக்குத் தெரியாது. 40 ஆண்டு காலத்தில் விஜயகாந்த் சம்பாதித்துதான் மக்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். காசு கொடுத்து யாரும் விஜய காந்தை வாங்கிவிட முடியாது. விஜயகாந்த் பாசத்துக்கு கட்டுப்படுவார். பணத்துக்கு கட்டுப்படமாட்டார். தமிழ கத்தை முன்னணி மாநிலமாக்குவோம். அந்த பயணத்தில் தடைகள், ஏளனங்கள் வந்தாலும் தகர்ப்போம்.

அப்பப்போ விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறாங்க…கேப்டனுக்கு சைனஸ் இருக்கிறது. மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு இருக்கிறது. ஏன்னா.. சிவாஜிக்குப் பிறகு பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர் விஜயகாந்த். தொண்டையில் ஸ்டாம் செல் பிரச்சனை அவருக்கு இருக்கிறது.. விஜயகாந்த் ஆனாலும் கேப்டன் கூட்டணிக்காக பேரம் பேசுவதாக எல்லா பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்படுகிறது. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது. பேரம் என்ற வார்த்தைக்கே எங்களுக்கு அர்த்தமே தெரியாது. கேப்டனை பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர் மற்றவர்களுக்கு கொடுப்பாரே தவிர, யாரிடமும் கைநீட்டி பணம் வாங்க மாட்டார். அவர் நடிகராக இருக்கும்போது, இயக்குநரிடம் மட்டும் தனது சம்பளத்தை கைநீட்டி வாங்கியிருப்பார். இப்போது யாரிடமும் வாங்க மாட்டார்.’

மொத்தத்துலே தி.மு.க. -ன்னா தில்லுமுல்லு கட்சி. அ.தி.மு.க. என்றால், அனைத்திலும் தில்லுமுல்லு கட்சி. தி.மு.க., அதுனாலே அ.தி.மு.க.வை தமிழகத்தைவிட்டு விரட்டும் நேரம் வந்துடிச்சி. குறிப்பா தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தே.மு.தி.க. தேர்தல் கூட்டணி தொடர்பான நல்ல முடிவை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்”என்று பிரேமலதா தெரிவித்தார்.

இதையடுத்து விஜயகாந்த் பேசும்போது, “நான் உளறுவதாக சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். விஜயகாந்துக்கு பேசத் தெரியாது பணம் வாங்குகிறார்? சீட்டு நிறைய கேட்குறாரா? என்று சொல்கிறார்கள். கூட்டணி பற்றி பேசுவாரா? சொல்லாவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்?காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், நான் கிங் ஆக இருப்பதா? அல்லது கிங் மேக்கராக இருப்பதா என்று தொண்டர்களைக் கேட்டேன். உங்களுக்கே தெரியும். கிங்காக இருக்க வேண்டும் என்றே அனைவரும் சொன்னார்கள். இப்போது அதே கேள்வியை மகளிரணியான உங்களிடமும் கேட்கிறேன். நீங்களும் கிங் என்றே சொல்கிறீர்கள்.சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேர்தல் பணிகள் இனி தீவிரமாக நடைபெறும். அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று விஜயகாந்த் பேசினார்.

error: Content is protected !!