ஐபேட் 5 ஆம் தலைமுறை – ஐபேட் ஏர் இன்று அறிமுகம்…முதல் தமிழ் ரெவ்யு!

ஐபேட் 5 ஆம் தலைமுறை – ஐபேட் ஏர் இன்று அறிமுகம்…முதல் தமிழ் ரெவ்யு!

ஐபேட் 5ஆம் தலைமுறை டேப்ளட் இன்று மதியம் ஒரு மணிக்கு கலிஃபோர்னியா நேரப்படி அறிமுகபடுத்தபட்டது. இதன் சாராம்சங்களை பார்ப்போம்.

1. பழைய 1.4 பவுன்ட் இதில் குறைக்கபட்டு 1 பவுன்டு (450கிராம்) மட்டுமே …..இதனால் உலகத்தின் முதல் முழு டேப்ளட் வரிசையில் எடை குறைந்த டேப்ளட் என்று ரெக்கார்டை உருவாக்கியிருக்கிறது.

2. தடிமன் 7.5 மில்லிமீட்டர் மட்டுமே – உலகின் மெல்லிய டேப்ளட்டும் இதுதான். அதனால் தான் இதன் பெயர் ஐபேட் ஏர்.
23 - ravi ipad
3. 9.7 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே சும்மா தீ மாதிரி இருக்கிறது.

4. ஒரு கணனிக்கு உன்டாட எம்7 மோஷன் பிரசாஸர் மூலம் 64பிட் ஆர்க்கிடெக்ச்சரில் உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் இதன் ஜிபியூ பழைய ஐபேடை விட 72 மடங்கு அதிக வேகமாய் வேலை செய்யும்.

5. இதில் ஆப்பிள் 5எஸ்ஸில் உள்ள மாதிரி டச் சென்ஸார் பட்டன் இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே.

6. ஐபேட் ஏர் 4ஜி / எல்டீஈ எனப்படும் 4.5ஜியில் கூட‌ வேலை செய்யும்.

7. இதன் பேட்டரி 32.4 வாட்ஸ் – பத்து மணி நேர லைஃப் கியாரன்டி.

8. ஐபேட் ஏரில் ஐஸைட் கேமரா பின்புறம் இருப்பதால் மெல்லிய வெளிச்சத்தில் நன்கு படம் எடுக்க கூடிய 5 மெகா பிக்ஸல் கேமரா இருக்கிறது.

9. மிமோ வையர்லெஸ் டெக்னாலஜி இருந்தாலும் ஐபேட் ஏர் 802.11 ஸ்டான்டர்டை தான் உபயோகிக்கிறது.

10. கடைசியாக வெறும் 100 டாலர் மட்டும் அதிகம் – நவம்பர் 1லிருந்து உங்களுக்கு 16/32/64/128ஜிபிகளில் கிடைக்கும் அதிவேக அதி மெல்லிய, அதி எடை குறைந்த ஐபேட் ஏர் ஓஸ் 7 மூலம் கலக்கவிருக்கிறது. NO GOLD colour

வாங்கிட்டு இன்னும் நிறைய‌ சொல்றேன் – யார் எனக்கு வாங்கி தரீங்க – இப்படி மொத்தமா கையை தூக்கினா எப்ப்டி ஒவ்வொருத்தரா கையை தூக்கிங்க ப்ளீஸ்

error: Content is protected !!