ஏன் வேண்டும் மூன்றாவது அணி?

ஏன் வேண்டும் மூன்றாவது அணி?

இன்றைய ஹிண்டுவில் வெளிவந்துள்ள ஒரு சிந்தனையைத் தூண்டும் கட்டுரை அதன்  (சற்றே  நெகிழ்வான) மொழிபெயர்ப்பு கீழே.  மூலக் கட்டுரையின் இணைப்புக் கீழே, இறுதியில்

பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் இந்து பெரும்பான்மைவாத அரசியலுக்கும் அர்த்தமுள்ள மாற்றாக காங்கிரஸ் தலையெடுக்கிறதா  இது ஒரு முக்கியமான புதிர் நிறைந்த கேள்வி (ஐந்து மாநிலத்) தேர்தல் பிரச்சரங்களை, குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தானில் அது மேற்கொள்ளும் பிரச்சாரங்களைப் பார்க்கும் போது அது குறைந்த அளவிலான எதிர்ப்புக் கொண்ட பதையையே தேர்ந்தெடுத்திடுத்திருக்கிறது.

இந்த இரு மாநிலங்களும், பாஜகவின் இந்துத்வா முழுமையாக மலர்ந்திருக்கும் மாநிலங்கள். தனது எதிரியின் பிரித்தாளும் திட்டத்தை அ எதிர்க்கும் தனது மாற்று அரசியலை முன்வைக்கும் ஒரு நல்ல வாய்ப்பை அவை காங்கிரஸிற்கு அளித்தன.

சங்பரிவாருக்கு எதிராகக் கொள்கை ரீதியாகப் போர் தொடுக்க, அங்கு நிலவும் ஆட்சிக்கு எதிரான மனோபாவம் உச்சத்தில் இருப்பது, இருகட்சிகளுக்கும் இடையேயான நேரிடையான போட்டி என்ற இரண்டும் இணைந்து காங்கிரசிற்குக் கை கொடுக்கும் சூழ்நிலை.

ஆனால் அங்கு காங்கிரஸ் அத்தகைய கொள்கைப் போரை நடத்த எந்த முனைப்பும் காட்டவில்லை. மாறாக பாஜகவின் வாக்கு வங்கியான மேல் சாதியினரைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகளையே மேற்கொண்டது. “மென்மையான இந்துத்வா” எனச் சொல்லப்படும் கருத்தியலையே அது ஆரத் தழுவிக் கொண்டது.
உதாரணமாக, மத்திய பிரதேசத்தில், ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு கிராமத்திலும் பசுப் பாது காப்புக் கூடங்கள் கட்டித்தர அது உறுதியளித்துள்ளது. கேரளத்தில்,. அனைவரும் சமம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் உணர்வை ஏற்பதற்கு பதிலாக, மத உணர்வுகள் என்ற பெயரில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் செல்வதை எதிர்க்கும் நிலையை காங்கிரசின் மாநிலத் தலைமை மேற்கொண்டது. ராஜஸ்தானிலும் கூட, பாஜக வசம் உள்ள மேல்சாதியினரின் வாக்குகளை மீட்டெடுப்பதுதான் காங்கிரசின் திட்டம்.

சாதிய உணர்வுகளை முறையற்ற வழியில் திருப்திப்படுத்தாமல் எந்த ஒரு கட்சியும் மேல் சாதிகளின் வாக்குகளைக் கவர்ந்திழுக்க முடியாது என்ற நிலையை இந்துத்வா அரசியல் உரத்த குரல் ஏற்படுத்தியுள்ளது

பாஜகவின் ‘கடும் இந்துத்வா’’ எனக் கருதப்படும் கருத்தியலுக்கு மாற்றாக, காங்கிரஸ் ‘மென்மை யான இந்துத்வா’வைப் பயன்படுத்துவது குறித்து அண்மைக்காலமாக விவாதங்கள் எழுந்துள்ளன. ராகுல் தனிப்பட்ட முறையில் ஒரு பக்திபூர்வமான இந்து என்ற வகையில் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் செயல்களே ‘மென்மையான இந்துத்வா’ என முத்திரை குத்தப்படுகிறது என்று ராகுலின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், கோயில்களுக்கு அவர் செல்வது, ( அது புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பில்லாமல் நிகழ்வதில்லை) சமீப காலமாக நெற்றியில் ஒளிரும் குங்குமம், கைலாஷ் மானசரோவருக்கு அவர் மேற்கொண்ட புனித யாத்திரை, நான் சிவ பக்தன் என்ற அறிவிப்பு ஆகிய எல்லாச் செயல்களுக்கும் அரசியல் முக்கியத்துவம் உண்டு.

அவை ஒன்று, சமூக அரசியல் அரங்கில் பரவலாக நிரம்பியிருக்கும் ‘இந்துவாக்கல்’ (Hinduisation) என்பதற்கான ஒரு கெட்டிக்காரத்தமான எதிர்வினையாக இருக்க வேண்டும். அல்லது இந்துத்வா சக்திகளை வீழ்த்த முடியவில்லை என்பதன் ஒப்புதலாக இருக்க வேண்டும்.

இதைத்தான், அதாவது, அரசியல் அதிகாரத்தைத் திரட்ட இந்து என்ற அடையாளம் ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதைத்தான், இந்துத்வ சக்திகள் கோருகின்றன –என்று விரிந்து கொண்டும் போகும் கட்டுரை, இப்படி முடிகிறது:

சங்பரிவாரின் ஆக்ரோஷமான இந்துத்வாவும் ராகுல் காந்தியின் அச்சுறுத்தாத இந்துமதமும் ஒரு விஷயத்தில் முழுமையாக ஒன்றுபட்டு நிற்கின்றன: இரு கட்சிகளுமே மேல்சாதியினரின் விருப்பத் தேர்வாகத் தங்கள் கட்சி இருக்க வேண்டும் என விரும்புகின்றன. இப்படி இருக்கும் வரை காங்கிரஸ் சமத்துவம் என்ற கொள்கையைத் தனது அரசியலில் செயல்படுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ராகுல்காந்தியும், காங்கிரசும், இந்துத்வாவிட மிருந்து தங்களை மீட்டெடுப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் முற்போக்காளர்களும் நல்ல மனம் கொண்டவர்களும், திகைப்போடு விழித்துக் கொள்ள வேண்டியிருக்கும்

இடதுசாரிகள், பெரியாரிஸ்ட்கள், விசிக தலைமை சிந்திப்பார்களா?

https://www.thehindu.com/…/the-party-o…/article25439356.ece…

மாலன் நாராயணன்

Related Posts

error: Content is protected !!