எஸ்.எம்.எஸ்-ஸில் தி மு க!

எஸ்.எம்.எஸ்-ஸில் தி மு க!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக தலைவர் கருணாநிதி கடிதங்கள், அறிக்கைகள், பேட்டிகள் மற்றும் திமுக செய்தி வெளியீடுகள், நிகழ்வுகளை குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் காணும் சேவையை திமுக தலைவர் கரு ணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், திமுக மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி உடனிருந்தனர்.
jan 19 - karunanidhi
இந்த குறுஞ்செய்தி வசதியை திமுக தலைவர் கருணாநிதி இணையதள நிர்வாகிகள் என். நவீன், எஸ். சுரேஷ் ஆகியோர் உரு வாக்கியுள்ளனர். இந்த குறுஞ்செய்தி சேவையை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், “DMK (space) (District Name) என டைப் செய்து, , 56070 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் திமுக தலைவர் கருணாநிதி கடிதம், அறிக்கை, பேட்டிகள் மற்றும் தலைமைக் கழக செய்தி வெளியீடுகள் அனைத்தும் வருகிற 15-2-14 முதல் அனுப்பப்படும். திமுக தலைவர் கருணாநிதி முகநூல், டிவிட்டர் பயன்படுத்துவோர் மற்றும் புதிதாக செய்திகள் அறிய விரும்புபவர்கள் இந்த தொழில்நுட்ப வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!