எம்.பி. தேர்தல் :மதிமுக. பொதுச் செயலர் வைகோ.,வின் மனு ஏற்பு!

எம்.பி. தேர்தல் :மதிமுக. பொதுச் செயலர் வைகோ.,வின் மனு ஏற்பு!

அண்மையில் வந்த வைகோ மீதான தேசத் துரோகி என்ற தீர்ப்பையும் மீறி மாநிலங்களவைக்குப் போட்டியிடும் மதிமுக, பொதுச் செயலர் வைகோ.,வின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பலத்தின் அடிப்படையில், திமுக 3 எம்பி.,க்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி, திமுக., 2 பேருக்கும்,மதிமுக., சார்பில் வைகோ.,வுக்கு ஒரு சீட்டும் ஒதுக்கப் பட்டது.

திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.,வும் மனு தாக்கல் செய்தார். ஆனால், தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, அவரது மனு நிராகரிக்கப்படலாம் என்று கூறப் பட்டது. இதை அடுத்து, மாற்று ஏற்பாடாக, திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன. இதில், வைகோவின் மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.

இதை அடுத்து, 23 ஆண்டுகளுக்கு பிறகு எம்.பி-யாக தேர்வாகிறார் மதிமுக பொது செயலாளர் வைகோ. என் வேட்புமனு ஏற்கப்படும் என்று நம்பிக்கை இருந்தது என்று வைகோ கூறினார். மேலும், என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கூறிய அவர், யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை நான் போட்டியிடுவதால் மதிமுகவில் எந்த வித அதிருப்தியும் இல்லை என்றார்.

error: Content is protected !!