என்னை சிந்திக்க விட மாட்டீர்களா? – விஜயகாந்த் கேள்வி

என்னை சிந்திக்க விட மாட்டீர்களா? – விஜயகாந்த் கேள்வி

“யாருடன் கூட்டணி, கூட்டணி என்று கேட்கிறார்கள். என் மனதில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் பொறுமையாக இருக்கிறேன். திருமாவளவன் சந்தித்தார். உடனே கருத்து கேட்றீர்கள். என்னை சிந்திக்க விட மாட்டீர்களா? நாட்கள் இருக்கிறது. எனது கட்சி மாநாடு இருக்கிறது. அதன் பிறகு சொல்கிறேன். நிறைய தூது வருகிறது. எல்லோரும் என்னிடம் வருவார்கள். அதை பற்றியெல்லாம் சொல்ல முடியுமா?” என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
DSC_3456
தே.மு.தி.க. சார்பில் பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா பொங்கல் பானைகளுக்கு தீபாராதணை காட்டி, பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கிய போது கூடியிருந்த, விஜயகாந்த் மற்றும் மகளிர் அணி பெண்கள் குலவையிட்டு ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று முழங்கினர்.

அதனை தொடர்ந்து விஜயகாந்தும், பிரேமலதாவும் சூரிய பூஜை நடத்தி பசுவுக்கு பொங்கல், வாழைப்பழம் வழங்கினர். பின்னர் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளின் நடனம் நடந்தது.அத்தனை நிகழ்ச்சிகளையும், பார்வையாளர் வரிசையில், விஜயகாந்த், பிரேமலதா, அமர்ந்திருந்து ரசித்தனர்.

அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி விஜயகாந்த் பேசும்போது,”பொங்கல் விழாவை கட்சி நிர்வாகிகளே இங்கே நடத்துகிறார்கள். கிறிஸ்துமஸ் விழாவை ஒரு மாவட்ட செயலாளர் செய்தார். இந்த விழாவை வேறு ஒரு மாவட்ட செயலாளர் செய்கிறார். போட்டி போட்டு செய்கின்றனர். சிலர் நினைக்கின்றனர் எங்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்து விடாதா? பிரிந்து விட மாட்டார்களா? என்று எண்ணுகிறார்கள். அது நடக்காது. என்னையும், என் தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது.

இலவசங்களை கொடுக்கிறீங்க. வேலையை கொடுக்கிறீர்களா? இன்றைக்கு விவசாயிகள் தமிழகத்தில் பெரிய துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பிரதமர் ஆவது எல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் தமிழக மக்களை கவனியுங்கள். தமிழக மக்களை சீராட்டுங்கள். இடைத்தேர்தலில் இலவசத்தை கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள். ஆனால் பொது தேர்தலில் காலி செய்து விடுவார்கள்.

கோர்வையாக பேச தெரியாது என்று சொல்கிறார்கள். கோர்வையாக பேசி மக்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. மனம் என்ன சொல்கிறதோ? அதை எனக்குள் தணிக்கை செய்து பேசுகிறேன். இதில் என்ன தவறு? நான் காங்கிரசையும் குறை சொல்வேன். பாரதீய ஜனதாவையும் குறை சொல்வேன். தனியாக நின்றாலும் குறை சொல்வேன். இதுவரைக்கும் யாருடன் கூட்டணி என்று சொல்லியிருக்கிறேனா?

யாருடன் கூட்டணி, கூட்டணி என்று கேட்கிறார்கள். என் மனதில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் பொறுமையாக இருக்கிறேன். திருமாவளவன் சந்தித்தார். உடனே கருத்து கேட்றீர்கள். என்னை சிந்திக்க விட மாட்டீர்களா? நாட்கள் இருக்கிறது. எனது கட்சி மாநாடு இருக்கிறது. அதன் பிறகு சொல்கிறேன். நிறைய தூது வருகிறது. எல்லோரும் என்னிடம் வருவார்கள். அதை பற்றியெல்லாம் சொல்ல முடியுமா?

எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இன்றைக்கு காலையில் இருந்தே நான் என்னென்ன வேலை செய்தேன் உங்களுக்கு தெரியுமா? என்னை பொருத்தவரையில் எங்கு போனாலும், என்ன செய்தாலும் முரசு முழங்க வேண்டும்.”என்று விஜயகாந்த் பேசினார்.

error: Content is protected !!