எங்க ஓட்டு நோட்டாவுக்குத்தான்! – இந்தியாவிலுள்ள பாலியல் தொழிலாளிகள் அறிவிப்பு

எங்க ஓட்டு நோட்டாவுக்குத்தான்! – இந்தியாவிலுள்ள பாலியல் தொழிலாளிகள் அறிவிப்பு

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 4-ந்தேதி தொடங்கி மே மாதம் 6-ம் தேதிவரை ஆறு கட்டங் களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய சிகப்பு விளக்குப் பகுதியாக கருதப் படும் இம்மாநிலத்திலுள்ள சோனாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பாலியல் தொழிலாளிகள் இந்த தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்னும் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
sex mar 30
இதுதொடர்பாக, மாநில தலைநகர் கொல்கத்தாவில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த தர்பார் மகிளா சமன்வாயா கமிட்டியின் தலைவரான பாரதி டேய், “பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொருமுறை தேர்தல் வரும்போதும் அரசியல் கட்சிகள் மிகப்பெரிய வாக்குறுதி களை அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்குவந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் முன்வருவதில்லை.

வயதான பாலியல் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம், சட்டப்புறம்பாக பெண்களை விபச்சாரத்துக்காக கடத்திச் செல் வதை தடுப்பது, விபச்சாரத்தையும் ஒரு தொழிலாக அங்கீகரிப்பது, தொழிலாளர் நலத்துறை சட்டங்களின்கீழ் எங்களையும் இணைப்பது, சிறுமிகளை பலவந்தப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளுவதை தடுப்பது உள்ளிட்ட எங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் பல ஆண்டுகாலமாக பாராமுகமாகவே இருந்து வருகின்றன.

எனவே, இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கும், சட்டப்பூர்வமாக பாலியல் தொழிலுக்கு அனுமதி அளித்துள்ள 16 மாநில அரசுகளுக்கும் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளோம். இந்த முறையும் எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் இனி நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் நோட்டாவை பயன்படுத்த எங்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் சுமார் ஐந்து லட்சம் பெண் கள் இனி நோட்டாவுக்கே வாக்களிப்பார்கள்.இதில் முதல்கட்டமாக மேற்கு வங்காளம் மாநில சட்டசபை தேர்தலில் மட்டும் எங்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பாலியல் தொழிலாளிகள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!