உ. பி. கிழக்கு பிராந்தியத்தின் பொது செயலாளரானார் பிரியங்கா காந்தி!

உ. பி. கிழக்கு பிராந்தியத்தின் பொது செயலாளரானார் பிரியங்கா காந்தி!

நாட்டின் மிகப் பெரிய ஹொகிதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதிக்கான பொதுச் செயலாளராக சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காங்கிரஸ் கட்சியின் எந்த பொறுப்பையும் வகிக்காத பிரியங்கா காந்திக்கு முதல் முறையாக கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி அமைப்பது, தேர்தல் பிரச்சாரங்களை மேற் கொள்வது, தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான கட்சிப் பணியாளர்களை நிர்ணயிப்பது உள்ளிட்டப் பணிகளில் இரு தேசியக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் மகளும் ராகுல் காந்தியின் சகோதரி யுமான பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜோதிராதித்யா சிந்தே உள்ளிட்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அசோக் கெல்லாட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கே.சி.வேணுகோபாலை காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார். அதேபோல, பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராகவும் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி பொதுச் செயலாளராகவும் ராகுல் காந்தி நியமன்ம் செய்துள்ளார். ஜோதிராதித்ய சிந்தே உடனடியாகவும், பிரியங்கா காந்தி பிப்ரவரி முதல்வாரத்திலும் பொறுப்பேற்பார். குலாம் நபி ஆசாத், ஹரியானா மாநிலத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவரது, தாயும் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான சோனியா காந்திக்கு பிரச்சாரம் செய்வதில் ஆரம்பித்து, ராகுல் காந்தியின் பிரச்சார மேற்பார்வையாளராகவும் இருந்து வந்தார் . 2007ல் சட்டமன்ற தேர்தலின் போது அமேதி தொகுதி யில் இருந்த 10 இடங்களுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் போது எழுந்த பூசலினை சரி செய்ய இரண்டு வாரங்கள் கடுமையாக உழைத்தார். தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட காத்திருக்கும் அவர் வரும் பிப்ரவரி மாதத்தில் பதவி ஏற்க உள்ளார். மேலும் வரவிருக்கும் லோக் சபா தேர்தலிலும் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது

error: Content is protected !!