உலக காடுகள் தினம்! – மார்ச் – 21

உலக காடுகள் தினம்! – மார்ச் – 21

ருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது.

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மனித இனம அதன் வரலாற்றில் சந்தித்துள்ள நெருக்கடியான பிரச்னைகளில் இது வரை சந்திக்காதது புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள். முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது மற்றும் புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும்.வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றன.

நம் இந்தியாவில் சுமார் 24% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 2.2 கோடி பேர் வன நிர்வாகத்தில் பங்கேற்றுள்ளார்கள். சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வன விலங்கு சரணாயலங்கள் இருக்கின்றன. நாட்டில் நில பரப்பில் 35 சதவிகிதத்தை காடு வளர்ப்பு மற்றும் மர வளர்ப்பின் கீழ் கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. காடுகளை அவைகளின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அக்கறையுடன் வளர்க்கப்பட இருக்கிறது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகள் மற்றும் மரங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது.

error: Content is protected !!