இறைவி திரைப்படம் என்ன ஸ்பெஷல் + லேட்டஸ்ட் ஆல்பம்+ டிரைலர்

இறைவி திரைப்படம் என்ன ஸ்பெஷல் + லேட்டஸ்ட் ஆல்பம்+ டிரைலர்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா, அபி & அபி பிக்சர்ஸ் சார்பில் அபினேஷ் இளங்கோவன் , திருக்குமரன் என்டர்டெயின்மென் சார்பில் சி வி குமார் ஆகியோர் தயாரிக்க, எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் , பிட்சா மற்றும் ஜிகிர்தண்டா படங்களின் மூலம் வியக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் படம் இறைவி .


அம்மா, சகோதரி, மனைவி , மகள் என்று யாராக இருந்தாலும் பெண்கள் என்றாலே அவர்கள் ஆணுக்கு அடங்கியவள் என்ற எண்ணம் சமூகத்துக்கு இருக்கிறது . அதன் காரணமாக பெண்களின் உணர்வுகள் ஆண்களால் நசுக்கி சிதைக்கப்பட்டு அவர்கள் சூழ்நிலைக் கைதியாக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது . இதற்கு எதிராக, ஆண்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் பெண்களின் குரலாக வரும் படம் இது என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள்.

இதனிடையே படம் பற்றி கேட்ட போது கார்த்திக் சுப்புராஜ், “ எனக்கு அவ்வளவாக கதை சொல்ல வராது . ஜிகிர்தண்டா முடிந்த நிலையில் ஒரு நாள் தயாரிப்பாளர் சி வி குமாரிடம் இந்தப் படத்தின் கதையை ஜஸ்ட் ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் சொதப்பலாகத்தான் சொன்னேன் .ஆனால் அவர் சிறப்பாக புரிந்து கொண்டு ‘பண்ணலாம்’ என்று சம்மதம் சொன்னார் அப்புறம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன் . விஜய் சேதுபதியிடம் படிக்கக் கொடுத்தேன் . ஏனேன்றால் அவர் எதாவது கருத்து சொல்வார். பாபி சிம்ஹா கிட்ட கொடுக்க மாட்டேன் . இதையும் கொடுக்கல. எஸ் ஜே சூர்யாவிடம் கதை சொன்னேன் . வழக்கம் போலவே சொதப்பலாகத்தான் . ஆனால் அவர் நடிக்க ஒத்துக் கொண்டார் . ஷூட்டிங் பல நாட்கள் போன பிறகுதான் ஒரு நாள் என்னிடம் ‘கதை நல்லாதான் இருக்கு’ என்றார் .அப்போதுதான் அவர் கதை மீது நம்பிக்கை இல்லாமலே ஒத்துக் கொண்டது எனக்கு தெரிய வந்தது .

படத்தில் இத்தனை நடிகர்கள் ! ஒரு காட்சியில் ஒருவருக்கு முக்கியத்துவம் இருக்கும் . இன்னொருவர் சும்மா நிற்க வேண்டி இருக்கும் .அது போன்ற சமயங்களில் எல்லாம் தனக்கு முக்கியத்துவம் இல்லையே என்று முகம் சுளிக்காமல் ஒத்துழைத்த அத்தனை பேருக்கும் ஸ்பெஷ்ல் நன்றி . இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .

மே 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது இறைவி.

Related Posts

error: Content is protected !!