இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

உலகம் – 1

அனுஷ்கா ஒரு மருத்துவர்… அவருடைய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யும் ஒரு நல்ல உள்ளம் படைத்தவராக ஆர்யா…ஆர்யாவின் குணம் அனுஷ்காவுக்கு பிடித்துப்போக தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். காதல், திருமணம், போன்றவற்றில் ஆர்வமில்லாத ஆர்யா… அனுஷ்காவின் காதலை நிராகரிக்கிறார்… மேலும் உடல்நலம் சரியில்லாத தனது தந்தைக்காக திருமணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.இதற்கிடையில் அனுஷ்காவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயம் நடந்து விடுகிறது.
nov 22 - iranom ulagam
அதே சமயம் அனுஷ்காவை பார்க்க பார்க்க ஆர்யாவுக்கு காதல் மலர்கிறது. திருமண விருப்பத்தை ஆர்யா சொல்ல இப்போது அவர் மறுத்து விடுகிறார்….. ஒரு மருத்துவ கேம்புக்காக கோவா செல்லும் அனுஷ்காவை தொடர்ந்து செல்லும் ஆர்யா எப்படியோ முயன்று அனுஷ்காவை காதலிக்க வைக்கிறார்.

ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்க தெடங்கும்போது ஒரு இரவு தனியாக வெட்டவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்… அங்கு மகிழ்ச்சியாக இருக்கும் இருவரும்… நான் கிளம்புகிறேன் என்று கிளம்பும் அனுஷ்காவை விரட்ட… ஓடிக்கொண்டிருந்த அனுஷ்கா கால் இடறி கீழே விழந்து எதிர்பாராத விதமாய் தலையில் அடிப்பட்டு இறந்துவிடுகிறார்… அப்போது இடைவேளை..!

உலகம் 2 (கற்பனை உலகம் அல்ல… இன்னொரு உலகம்)

அங்கு வீரம் நிறைந்த அனுஷ்கா… வெறிபிடித்த ஒரு ஓநாயைக்கூட அசால்டாக தூக்கி வீசுகிறார் என்றால் பாருங்களேன்… பார்ப்பதற்கு அவதார் மாதிரி ஒரு வித்தியாசமான உலகம் ஆனால் உண்மையில் பழைய ஹாலிவுட் படங்கள் போல் இருக்கிறது…

அங்கு ‌இருக்கும் ஆர்யா அனுஷ்பாவை ஒரு தலையாக காதலிக்கிறார். பலமுறை தன்னுடைய காதலை சொல்லி அனுஷ்காவிடம் நல்ல அடிவாங்குகிறார். இதற்கிடையில் அந்தப்பகுதி ராஜா அனுஷ்காவை தன்னுடைய அரண்மனைக்கு தூக்கிசெல்கிறார்.. கோவம்கொண்ட ஆர்யா அனுஷ்காவை தன்னுடன் ஒப்படைக்கும்படி கேட்கிறார்.

அதற்கு தனக்கு ஒரு சிங்கத்தில் தோல் வேண்டும்…. ஒரு சிங்கத்தை கொண்று அதன்தோளுடன் வந்தால் இவளை நான் ஒப்படைக்கிறேன் என்று சொல்ல உடனே காட்டுக்கு புறப்படுகிறார்.. ஆர்யா…

வெறிகொண்ட ஒரு கிராப்பிக்ஸ் சிங்கத்தை சண்டையிட்டு அதனுடைய தோலை ராஜாவுக்கு அளிக்கிறார்… தன்னுடன் அனுப்பும் அனுஷ்காவை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் தயாராகிறது… காதல் என்னவென்று அறியாத அந்த உலகத்தில் நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்று ராஜாவை கொல்ல துணியிம் அனுஷ்கா இறுதியில் தன்னையே மாய்த்துக்கொள்கிறார்…திருமணம் நடக்க வேண்டிய இடத்தில் அனுஷ்கா இறந்து போகிறார்… அப்போது இடைவேளை...

இடைவேளை வரை இந்த இருகதைகளும் மாறிமாறி வருகிறது..

இப்படி இரண்டு உலகத்திலும் தன்னுடைய காதலியான அனுஷ்கா இறந்துபோக என்னசெய்வதென்று பித்துப்பிடித்தவராகிறார் ஆர்யா..

அதன் பிறகுதான் செல்வராகவனின் கொலைவெறி ஆரம்பிக்கிறது…

என்ன செய்வதென்னு இரண்டு உலகத்திலும் தனித்தனியே பைத்தியமாக சுற்றுகிறார் ஆர்யா…. இரண்டாம் உலகத்தில் உள்ள ஆர்யா ஒரு சவால் விட்டு ஒரு சாமி மலையில் ஏறுகிறார்…

அதே வேளையில் நம்முடைய உலகத்தில் இருக்கும் ஆர்யா என்ன செவ்வதென்று புரியாது ஒரு தன்னை அழைப்து போன்ற ஒரு காரில் காரில் மலைமேல் போகிறார்… கடைசியில் இரண்டு ஆர்யாக்களும் ஏறுவது ஒரே மலை தான் என் தெரிகிறது…

காரில் இருந்து மலையில் இருந்து கீழே விழநினைக்கும் ஆர்யாவை இரண்டாம் உலக ஆர்யா காப்பாற்றி அந்த உலகத்திற்கு கொண்டு செல்கிறார்… (இரண்டாம்உலக ஆர்யாவின் அம்மாதான் இந்த இருவருரை தன்னுடைய தெய்வசக்தியால் சந்திக்க வைக்கிறார் என்று பின்னர் புரிய வைக்கிறது)

அடப்பாவிகளா….

இதுவரை பொறுமையா படத்தை பார்த்தது பத்தாதுன்னு இன்னும் கொடுமையிருக்கான்னு பார்த்த… அந்த இரண்டாம் உலக அனுஷ்காவை அந்த ஆர்யாகாதலித்து இருவரும் இணைய இந்த ஆர்யாவை பயன்படுத்திக் கொள்கிறார் என்று புரியவருகிறது..

நம் ஆர்யா எப்படி அந்த ஜோடி சேர காரணமாகிறார்கள் என்று கடைசி மீதிக் கதையை அப்படி இப்படி என முடித்திருக்கிறார்…

இடைவேளை வரை வரும் கதையை முழுதாக நீட்டித்து முடித்திருந்தால் கூட படம் கொஞ்சம் பிக்கப் ஆயிருக்கும்… இந்த கதையை இந்த படத்தை என்ன சொல்வதென்று புரியாமல் தவிக்கிறேன்…

வித்தியாசமான இரண்டாம் உலகத்தை காட்டப் போகிறேன் என்று சொன்னதால் நான் உள்பட அனைவரும் ஆர்வமாக இருந்தோம் ஆனால் இந்த உலகம் சாதாரண லைட்டிங் எப்பைக்ட் மற்றும் கொஞ்சம் சுமாரான கிராப்பிக்ஸ் கொண்டு செய்யப்பட்டுள்ளது என்று பார்க்கும் அனைவருக்கும் தெரிந்துப்போகிறது.

ஆர்யாவின் நடிப்பு அப்படியொன்றும் பிரமாதமாய் இல்லை.. ஒரு எதார்த்தம் தெரிகிறது… அதை கடைசி வரை தக்கவைக்க முடியவில்லை… இரண்டாம் உலக ஆர்யா பரவாயில்லை கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கிறார்…

அனுஷ்கா டாக்டர் கதாபாத்திரத்தில் எதார்த்தமாய் வந்திருக்கிறார்… இரண்டாம் உலக அனுஷ்கா கலக்கியிருக்கிறார்.. வீரமான தைரியமாக சண்டைக்காட்சிகள் என அசத்தியிருக்கிறார்…

நகைச்சுவைக்கு என்று யாரும் இல்லை படத்தில் நகைச்சுவையும் இல்லை…

நம் காதலி இறந்துவிட்டாள் என்பதற்காக கவலை அடைய வேண்டாம் நம் மனதுக்குள் உண்மையான காதல் இருந்தால் நம் காதலியை எந்த உலகத்திலாவது கண்டறிந்துவிடலாம் என்று கதையில் சாரம் சொ்லலியிருக்கிறது.

ஆனால் எந்த ஒரு வித்தியாசமான கதை களமோ.. காட்சி அமைப்போ புதுமைகளோ இந்த படத்தில் நம் கண்ணுக்கு புலப்படவில்லை..படம் பார்த்துவிட்டு கிளம்பும் அனைவரும் அப்பா முடிஞ்சதா என்ற மனநிலையோடு கிளம்புகிறார்கள்..

இந்த படத்தை எதற்க்கு இரண்டு வருடங்கள் எடுத்தார்கள் என்று புரியவில்லை…ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார்… பாடல்கள் சுமார் ரகம்தான்… பிண்ணனி இசை அனிருத் இதுவும் பரவாயில்லை ரகம்தான்…இந்த இரண்டாம் உலகம் படத்தை ‘உலக தொலைக் காட்சி’யில் முதல் முறையாக போடும் போது கூட நீங்க பார்க்க வேண்டாம் – இதுவே நம் எச்சரிக்கை

கவிதை வீதி… சௌந்தர்
/@http://kavithaiveedhi.blogspot.com/2013/11/irandam-ulagam-movie-review.html

error: Content is protected !!