இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளது இந்தோனேசியா, இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங் கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க நிலையில் இந்த இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை யும் விடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தோனேஷியாவில் இன்று லம்பாக் தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டடங்கள், வீடுகள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தோனேசிய நாட்டின் வானிலை ஆய்வு மையம் அந்நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்கரையில் இருக்கும் மக்களை உயரமான பகுதிக்கு செல்லுமாறு எச்சரித்துள்ளது.

இந்ததோனேஷியாவில் கடந்தவாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தோனேசியா மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Related Posts

error: Content is protected !!