இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்- ஐநா தகவல்

இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்- ஐநா தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டில் சுமார் 18 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்து சுதந்திரப் பொன்விழாவையெல்லாம் கொண்டாடிய 1997ம் ஆண்டில் கூட 50 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே கல்வி அறிவு பெற்றிருந்தனர்.இந்நிலையில் இப்போதைய இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது என்றும் இது உலக மக்கள் தொகையில் 37 சதவீதமாகும்.எனவும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jan 29 - education in india
இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய – இலவசக் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்கான “கல்வி உரிமைச் சட்டம் 2009” இந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு இலவசக்கல்வியை கட்டாயமாக வழங்குவது மத்திய – மாநில அரசுகளின் கடமையாக வரையறை செய்யப்பட்டுள்ளது.மேலும் அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கும். தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளையாவது அவர்களுடைய பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் உள்ளது.

ஆனாலும் 2013-2014 ஐ.நாவின் உலகம் கல்வி கண்காணிப்பு அறிக்கையில் இந்தியாவில் கல்வி அறிவு இல்லாதவர்களின் எண்ணிக்கை 1991 ல் 48 சதவீதமாக இருந்தது. 2006 ல் 63 சதவீதமாக இருந்தது.மக்கள் தொகை வளர்ச்சியில் மாற்றம் இருந்தாலும் கல்வி அறிவு இல்லாதவர்களின் சதவீதத்தில் மாற்றம் இல்லை.என கூறி உள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் இந்தியாவின் பணக்கார இளம் பெண் உலக அளவிலான கல்வியை எட்டி உள்ளார். ஆனால் ஏழைபெண்கள் இத்தகைய கல்வி அறிவை எட்ட 2080 ஆண்டு வரை ஆகலாம்.உலக அளவில் கல்விக்கு அரசுகள் 129 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது . உலக மக்கள் தொகையில் 10 நாடுகளில் 557 மில்லியன் அல்லது 72 சதவீத கல்வி அறிவு இல்லாதவர்கள் உள்ளனர். இந்த சூழ் நிலையில் ஏழை நாடுகளில் 4 இல் 1 இளைஞர்கள் ஒற்றை வரியை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளனர்.இந்தியாவில் பணக்கார மாநிலமாக கேரளாவில் கல்விக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு மனிதனுக்கு 685 டாலர் செலவிடப்படுகிறது.

கிராமப்புற இந்தியாவில் பணக்கார மற்றும் ஏழை மாநிலங்கள் என வேறுபாடுகள் உள்ளன. ஏழை மாணவிகள் கண்க்கு பாடத்தில் மிகவும் பலவீனமாக உள்ளனர்.மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் பணக்கார மாநிலங்களில் பெரும்பாலான கிராமப்புற குழந்தைகள் 5-ம் வகுப்புக்கு மேல் படித்து உள்ளனர்.எனினும் மகாராஷ்டிராவில் 44 சதவீத குழந்தைகளும், தமிழ்நாட்டில் 55 சதவீத குழந்தைகளும் படித்து உள்ளனர்.பணக்கார மற்றும் கிராமபுற மாநிலங்களில் மாணவிகள் மாணவ்ர்களை விட சிறப்பாக படிக்கின்றனர்.- என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!