இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் ஸ்மோக்கிங் அடிமை!

இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் ஸ்மோக்கிங் அடிமை!

கடந்த 2005-06ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 11 தசவீதம் பெண்கள் புகை பிடிப்பது தெரிய வந்தது.’இவர்களில் பாதி பேர் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளி இடங்களில் வைத்து புகை பிடிப்பதாக கூறியிருந்தனர். புகை பிடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது நன்கு தெரிந்திரு ந்தும் புகை பிடிப்பதாக அவர்கள் கூறியதாக ஆய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து இந்திய இளம் பெண் களிடம் பரவி வரும் புகை பிடிக்கும் மோகத்தை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
smoke women feb 28
கடந்த ஆண்டு ஈருதியில் எடுத்த ஒரு சர்வேயிபில், இந்திய பெண்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பது தெரிய வந்துள்ளது. அதிலும்இந்திய பெண்களில் கடந்த 5 வருடங்களில் கல்லூரி படிப்புக்கு வந்துள்ள இளம் பெண்கள்தான் அதிகமாக புகை பிடிப்பதாக ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் தொலைக் காட்சித் தொடர்களைப் பார்த்து அவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு தள்ளப் பட்டதாக தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் இந்தியாவில், ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர்’ என கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட பிரபாத் ஜா தெரிவித்த தகவல்களின் சாராம்சம் :

* இந்தியாவில் 1998ல் 7.9 கோடியாக இருந்த புகை பிடிப்போர் எண்ணிக்கை, 17 ஆண்டுகளில் 36 சதவீதம் உயர்ந்து 2015 கணக்கின்படி 10.8 கோடி பேராக உயர்ந்துள்ளது

* கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த மொத்த இறப்பில் 10 சதவீதம் பேர் புகை பிடிப்பதால் இறந்துள்ளனர். இதில், 70 சதவீதம் பேர், 30 – 69 வயதுக்கு உட்பட்டவர்கள்

* கடந்த, 1998ல், 15 முதல், 69 வயதுக்கு உட்பட்டவர்களில், 27 சதவீதத்தினர் புகை பிடித்தனர்; அது, 2015ல், 24 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், புகை பிடிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

* பீடி மற்றும் சிகரெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சரிசமமாக உள்ளது

● 15 – 29 வயதிற்குள் தான் சிகரெட் பிடிக்கத் துவங்குகின்றனர். படிக்காதவர்களிடையே இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது

* இந்த 17 ஆண்டுகளில் நகரப் பகுதிகளில் 68 சதவீதமும், கிராமப் பகுதிகளில் 26 சதவீதமும், புகை பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது

* 15 முதல், 69 வயதுள்ள, 1.10 கோடி பெண்கள் புகை பிடிக்கின்றனர்

* உலகில் அதிகமாக புகை பிடிப்பவர்களில், சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில், இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!