இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை – கூகுள் முகப்பில் இடம் பெற்ற இந்திய மாணவியின் ஓவியம்

இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை – கூகுள் முகப்பில் இடம் பெற்ற  இந்திய மாணவியின் ஓவியம்

இணைய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள கூகுள் நிறுவனம் விசேஷ நாட்களில் வெளியிட்டு வரும் Doodle-கள் தொடர்பாக ஆண்டுதோறும் சில போட்டிகளை நடத்தி வருகின்றது.குறிப்பாக சிறுவர்களுக்காக நடைபெற்று வரும் Doodle என்ற போட்டியானது இந்த முறை நடைபெறுவது 4-வது முறையாகும். இதில் இதில் GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்படும் Doodle – னை தனது சர்ச் தளத்தின் முகப்பு பக்கத்தில் பிரசுரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கூகுள் 30,000 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக வழங்குவதுடன்.வெற்றி பெறுபவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்கு சுமார் 50,000 டாலர்கள் மதிப்புள்ள தொழில்நுட்ப வசதிகளையும் குகூள் நிறுவனம் ஏற்படுத்தித் தர போவதாகவும் அறிவித்து இருந்தது இந்நிலையில் இப்போட்டியில் புனாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்த சித்திரம்தான் இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
nov 14 - doodle_for_google_2013.
இந்த சித்திரத்துக்கு “Sky’s the limit for Indian women”- இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார் காயத்ரி கேதாராமன்.GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்துள்ள காயத்ரி, அதன் அர்த்தங்களையும் விளக்கியுள்ளார். பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் சித்திரத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூகுள் நடத்திய போட்டியில், நாடு முழுவதும் இருந்து 12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர் என்பது அடிசினல் தகவல்.

Children’s Day: Pune student’s Doodle 4 Google winning entry on Google India homepage
************************************************************************************
The Children’s Day doodle on the Google India home page has been designed by a class 10 student from Pune. The doodle titled “Sky’s the limit for Indian women” has been designed by Gayatri Ketharaman for the fifth edition of Doodle 4 Google competition with the theme celebrating Indian women.

error: Content is protected !!