இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம்

இண்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட “எதிர்வீச்சு”ஆல்பம்

மாலிக் ஸ்டீரிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ஷாகுல் மற்றும் எஸ்.ராஷிக் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “எதிர்வீச்சு”இந்த படம் இந்தியாவில் “எதிர்வீச்சு” என்ற தலைப்பிலும் “கோல்” என்ற தலைப்பில் வெளிநாடுகளிலும் வெளியிடப்படுகிறது. படத்தின் கதாநாயகனாக “சுண்டாட்டம்” படத்தில் நடித்த இர்பான் நடிக்கிறார்.கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ரஸ்னா நடிக்கிறார். கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி இயக்குகிறார் கே.குணா .
இவர் மௌனம்சம்மதம், ஏர்போர்ட் ,படிச்சபுள்ள போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இது.

படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ராஷிக்கிடம் கேட்டபோது.”இந்த படம் இண்டர்நேஷனல் கேம் புட்சால் ( international game futsal )என்கிற இண்டோர் புட்பால்(indoor foodball) விளையாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். இந்த விளையாட்டு தற்பொழுது உலக முழுவதும் பரவி வருகிறது. இதில் இர்பான் மலேசிய புட்பால் வீரராக நடிக்கிறார். படப்பிடிப்பு மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றது.மிகவும் பொழுதுபோக்குடனும், விளையாட்டு கலையுடனும் இணைந்து வெளிவரும் இந்த படம் மக்களுக்கு நிச்சயமாக ஜனரஞ்சகமாக அமையும்” என்கிறார் தயாரிப்பாளர் எஸ். ராஷிக்.

error: Content is protected !!