ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது: காங்கிரஸ் தகவல!

ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது: காங்கிரஸ் தகவல!

“ஆம் ஆத்மி கட்சிக்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனையைற்றது கிடையாது என்றும்,நாங்கள் உங்கள் அரசை கவிழ்க்க மாட்டோம் என்றுதான் தெரிவித்துள்ளோம்.ஆனால் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்காது.உங்கள் செயல்பாடு திருபதி அளிக்கவில்லை என்றால் மறுபரீசிலனை செய்வோம்” என்றும காங்கிரஸ் தெரிவித்து டெல்லியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
kejriwal_electricity_22
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 28 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. காங்கிரஸ் 8, பாஜ 31 இடங்களை கைப்பற்றின. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்தது. இதற்கிடையில், ஆட்சி அமைக்க முதலில் மறுப்பு தெரிவித்த கெஜ்ரிவால், தற்போது இது குறித்து மக்களிடையே கருத்து கேட்டு வருகிறார்.மக்கள் அதிகம் ஆதரவு வழங்கியதால் ஆட்சி அமைக்கும் முடிவுக்கு ஆம் ஆத்மி வந்துள்ளது.

இது குறித்து கெஜ்ரிவால் நாளை ஆட்சி அமைக்க திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு அளிக்கும் ஆதரவு நிபந்தனையைற்றது கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் கிரண் வாலியா தெரிவித்தார்.மேலும், நாங்கள் உங்கள் அரசை கவிழ்க்க மாட்டோம் என்றுதான் தெரிவித்துள்ளோம்.ஆனால் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்காது.உங்கள் செயல்பாடு திருபதி அளிக்கவில்லை என்றால் மறுபரீசிலனை செய்வோம் என்று தெரிவித்தார் என்ற செய்தி மேலும் டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது..

Support to Arvind Kejriwal’s AAP is not ‘unconditional,’ says Congress
***************************************************************
As Arvind Kejriwal’s Aam Aadmi Party (AAP) conducts an opinion poll to decide whether they should form a minority government in Delhi, the Congress on Saturday said that its support to the one-year-old party is not ‘unconditional’.

error: Content is protected !!