ஆன் லைன் அல்லது கார்ட் மூலம் பணப் பரிவத்தனைக்கு பல சலுகைகள்!

ஆன் லைன் அல்லது கார்ட் மூலம் பணப் பரிவத்தனைக்கு பல சலுகைகள்!

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் ஆன்- லைன் பணப்பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அதன்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து இந்த மின்னணு-பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான பரிந்துரை வரைவை நிதியமைச்சகம் உருவாக்கியது. பின்னர் இந்த பரிவர்த்தனை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் இணையதளம் வாயிலாக, நிதியமைச்சகம் கருத்துகளை கேட்டு வந்தது.
credit-debit
இவற்றின் அடிப்படையில் 30 கருத்துகள் அடங்கிய வரைவு ஒன்றை நிதியமைச்சகம் உருவாக்கி உள்ளது. இதில் ரூ.1 லட்சம் வரையிலான பணப்பரிவர்த்தனையை ஆன்-லைன் மூலம் நடத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஆன்லைன்-பரிவர்த்தனையில் உள்ள பல்வேறு விதமான மறைமுக கட்டணங்களை நீக்குதல், செலுத்தும் பணத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற சலுகைகள் அந்த வரைவில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு வருமான வரிப்பயன்கள் மற்றும் பெட்ரோல், சமையல் கியாஸ், ரெயில் டிக்கெட் போன்ற பயன்பாடுகளில் பரிவர்த்தனை கட்டண தள்ளுபடி போன்றவையும் வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல தங்கள் சரக்குகளுக்கு ஆன்-லைன் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் வழிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த வரைவு பரிந்துரை அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறையினரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அமைச்சரபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

error: Content is protected !!