ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்!

ஆப்பிள் Vs சாம்சங் :நஷ்டஈடும் “சில்லரை” விவகாரமும்!

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது என்று இன்று சில நாளிதழ்களிலும் அதையடுத்து பேஸ்புக்கிலும் செய்திகள் வெளியானது அது போலி செய்தி என்பது பலருக்கு தெரியவில்லை. இது சாத்தியம் இல்லாத தகவலும்கூட.
nov 25 - vanikam fake apple.mini
1.நீதிபதி அறிவித்த தொகை 1 பில்லியன், அதாவது 100 கோடி டாலர் அல்ல. 29 கோடி டாலர் மட்டுமே.

2.அப்பீல் அப்பீலாக செல்லும்போது வழக்கு முடிய பல ஆண்டு ஆகும். அதுவரை இழப்பீடு பட்டுவாடா watakkaathu.

3. சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்க்கு காப்பிரைட் சட்டத்தை மீறியதற்காக தரவேண்டிய தொகையான 1.049பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும் என்பது கடந்த ஆண்டு தீர்ப்பு, தற்போது மேலும் 290 மில்லியன் டாலர்கள் தர கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது வரை சாம்சங் இந்த பணத்தை தரவில்லை இது தொடர்பாக இன்னும் பல கட்ட விசாரணைகள் உள்ளன‌

4 டாலர் நோட்டுகள், சென்ட் காசுகள் அமெரிக்க விதிப்படி கடன்களை அடைக்க பயன்படுத்தலாம் என்றாலும் எந்த வகையில் பணத்தை பெற வேண்டும் என்பதை பணம் பெறுபவர் முடிவு செய்யலாம் என அமெரிக்காவில் விதி உள்ளது, எனவே தீர்ப்பான பின்னர் பணத்தை எப்படி தருவது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் கைகளில் தான் உள்ளதே தவிர, சாம்சங் நிறுவனத்தின் கைகளில் அல்ல.

5.100 கோடி டாலரை நிக்கலாக (பொடி சில்லரை நாணயமாக) மாற்றினால் 3,600 டன் எடை இருக்கும். அதை எடுத்து செல்ல 30 டிரக் போதாது. 2,755 டிரக் தேவை.

6 இதையெல்லாம் விட முக்கியமாக சாம்சங் நிறுவனம் நூறு கோடி டாலருக்கு சென்ட்டுகளாக மாற்ற வேண்டுமெனில் கடந்த 20 ஆண்டுகளில் வெளியான அத்தனை 5 சென்ட் காசுகளையும் சேகரித்திருக்க வேண்டும், அதை ரகசியமாக செய்தாலும் அவ்வளவு மதிப்புக்கு ஐந்து சென்ட் நாணயங்கள் தேறாது

7 மேலும் இது சென்ற ஆண்டு கிண்டலுக்காகாக ஒருஆங்கில இணைய தளத்தில் வெளியானது, அப்போது வந்த அந்த வதந்தியை இப்போது செய்தியாக்கி ரீஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ கடந்த ஆண்டே இச் செய்தி பொய் என்று தெரிவிக்கும் வீடியோ ::

http://www.youtube.com/watch?v=LzNUA2H8E34

Samsung pays Apple $1 Billion sending 30 trucks full of 5 cent coins.It is amazing way to pay.Trolling News about Samsung:
**********************************************************
Several web sites that Samsung ordered to pay Apple $ 1 billion in compensation paid to corrupt the news came as 5 cents.Epic Trolling from Samsung:In patent litigation between Apple and Samsung ordered to pay $ 1 billion, has chosen an amazing way to pay.

Related Posts

error: Content is protected !!