அரசு இ-சேவை மையங்களுக்கான ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கம்:

அரசு இ-சேவை மையங்களுக்கான ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கம்:

அரசு இ-சேவை மையங்களுக்கான ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரசு இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக 18004252911 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித் துள்ளது.

tntv feb 23

அரசு இ-சேவை மையங்கள் குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தமிழகம் முழுவதும் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச்செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நான்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 470 இடங்களில் அரசு இ-சேவை மையங் களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அமைத்து நிர்வகித்து வருகிறது.

அரசுப் பணி தேர்விற்கு விண்ணப்பிப்பது உள்பட 54 சேவைகள் இந்த மையங்கள் மூலம் வழங்கப் பட்டு வருகின் றன. அரசு இ-சேவை மையம் தொடர்பான தகவல்களை செல்பேசியில் தெரிந்து கொள்வதற்கு டி.ஏ.சி.டி.வி. என்ற செயலியை (ஆப்) கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுவரை 7ஆயிரத்து 832 நபர்கள் இந்தச் செயலியினை பதிவிறக்கம் செய்துள்ளனர். இச்செயலி யை  பயன்படுத்தி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இ-சேவை மையங்களின் முகவரி, வரை படம், மையத்திற்கு செல்லும் வழி, வழங்கப்படுகின்ற சேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களுக் கென்று பிரத்தியேகமாக, ‘டி.ஏ.சி.டி.வி.’ என்ற முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முக நூல் பக்கத்தில் அரசு இ-சேவை மையங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள் ளன.  பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த முகநூல் பக்கத்தினை நல்லமுறையில் பயன் படுத்தி, அரசு இ-சேவை மையங்களின் முகவரி, வழங்கப்படும் சேவைகள் மற்றும் அதற்குண்டான கட்டணம் ஆகியன குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தாங்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகள் மற்றும் குறைகள் மீது இந்நிறுவனம் தக்க நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், அது தொடர்பான விவரங்களையும் இந்த முகநூல் பக்கத்தில் பதிவு செய்யும். எனவே, தமிழ்நாடு அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்தின் இ-சேவை மையங்கள் குறித்த முகநூல் பக்கத்தினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்

error: Content is protected !!