அரசியல் சட்டம்! அப்படீன்னா? – பிரதமர் விளக்கம்!

அரசியல் சட்டம்! அப்படீன்னா? – பிரதமர் விளக்கம்!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வர லாற்றுப் பின்னணி யும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்து பூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நம் நாடாளு மன்றத் தால் இது முறையாக ஏற்கப் பட்டது.இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று தலைசிறந்த இடதுசாரிச் சிந்தனையாளர் எம்.என். ராய் முதன்முதலாக 1934-ல் குரல் கொடுத்தார். அவருடைய யோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1935-ல் அதையே தீர்மானமாக நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த யோசனையை ஏற்றது. கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு தலைமையிலான தேசிய நிர்வாகக் கவுன்சில் இதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கின.

law nov 28

அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல்சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தச் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததாலும், சில சமஸ்தானங் கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாலும் இந்தியப் பகுதிக்கான அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது. இவற்றுள் 207 உறுப்பினர்கள் பல்வேறு மாகாண சட்டசபைகளிலிருந்து பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுதேச சமஸ்தானங்கள் 93 பிரதிநிதிகளை அனுப்பின. 4 பிரதான மாகாணங்களிலிருந்து 4 பேர் சேர்க்கப்பட்டனர்.

13.2.1946-ல் இந்த சபைக்கான நோக்கங்களைத் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.1.1947-ல் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. 14.8.1947-ல் இந்த சபை கூடி, சட்டத்தை வகுக்கும் பணியைத் தொடங்கியது. 29.8.1947-ல் அரசியல் சட்டத்தை வகுக்கும் குழு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு முதலில் சச்சிதானந்த சின்ஹா தலைவரானார். பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். ஹரேந்திர குமார் முகர்ஜி என்ற வங்காள கிறிஸ்தவர் துணைத் தலை வரானார்.இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.

மாநிலங்களின் சட்டங்களுக்கான குழு, மத்திய அரசின் அதிகாரங் களையும் கடமைகளையும் வகுக்கும் குழு, மத்திய அரசின் அரசியல் சட்டங்களைத் தெரிவு செய்யும் குழு ஆகியவற்றுக்கு ஜவாஹர் லால் நேருவே தலை வராக இருந்தார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மை7 யினர், பழங்குடிகள் உரிமை, விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குத் தலைவர், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல். ஒட்டு மொத்த மான அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.இந்த அரசியல்சட்ட நிர்ணய சபை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்களுக்குப் பணி செய்தது. 11 தொடர்களாகக் கூட்டங்கள் நடந்தன. மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்7 களுக்கும் செலவிடப்பட்டது. மொத்தம் 7,635 திருத்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 2,473 விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடை முறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சட்டங்களின் சில அம்சங்களும் தேவைக்கேற்பச் சேர்க்கப்பட்டன.

இந்திய அரசியல் சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்ட வணைகள் இடம்பெற்றன. இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் இயற்றப்பட்டிருக்கிறது.“இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப் பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம். 1976-ல் இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தின் முகப்பு வாசகத்தில் ‘சோஷலிச,” என்ற வார்த்தை இணைக்கப்பட்டது

இப்பேர்பட்ட அரசியல் சட்டம் குறித்த விவாதம், பாராளுமன்றத்தில் இரு நாட்களாக நடைபெற்றது. நேற்று விவாதத்தில் குறுக்கிட்டு பிரதமர் நரேந்திர மோடி 70 நிமிட நேரம் பேசினார்.

அப்போது அவர் தன் உரையின் போது, “இந்த சபையில் அமர்ந்து, அரசியல் சட்டம் தொடர்பான விவாதத்தில் ஆர்வம் காட்டிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விவாதத்தின் முடிவில்தான், பிரதமர் பதில் அளித்து பேசுவார் என்ற தவறான எண்ணம் சிலரிடையே ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், மற்ற எல்லோரையும் போலவே, நானும் நடுவிலேயே பேசுகிறேன்.இந்த சபையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பாக பேசினார். சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேச்சு அருமையாக இருந்தது. அவரது பேச்சு, பாராளு மன்ற வரலாற்றில் அனைவருக்கும் உந்துசக்தி அளிக்கக்கூடிய ஆவணமாக திகழும் என்று நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்.

இங்கு ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் உணர்வு, ‘எனக்கு’ என்றோ, ‘உனக்கு’ என்றோ இல்லை. ‘நமக்கு’ என்றே இருக்கிறது.நவம்பர் 26-ந் தேதி (அரசியல் சட்ட தினம்) கொண்டாட்டம், ஜனவரி 26-ந் தேதியின் (குடியரசு தினம்) முக்கியத்துவத்தை குறைத்துவிடப்போவதில்லை. நமது அரசியல் சட்டம், ஒற்றுமையான இந்தியாவை வலியுறுத்துவதுடன், அனைத்து இந்தியர்களுக்கும் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்க அரசியல் சட்டத்தை வகுத்தவர், ‘மனிதன் அழிவற்றவனாக இருக்க முடியாது. ஆனால், அரசியல் சட்டம் அழிவற்றதாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். அதையே இங்கு நினைவுபடுத்துகிறேன்.இந்தியா, பல் வேறு மாறுபட்ட கலாசாரங்களை கொண்டது. அத்தகைய மாறுபட்ட மக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம், அரசியல் சட்டத்துக்கு உள்ளது. அதன் புனிதத்தன்மையை பாதுகாப்பது நமது பொறுப்பு.

அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், தான் தலித் என்பதால் அனுபவித்த பாரபட்சத்தை அரசியல் சட்டத் தில் காண்பிக்கவில்லை. அதில்தான் அவரது பெருமை இருக்கிறது. இன்று நிலவும் கசப்புணர்வை பார்க்கும் போது, அரசியல் சட்டத்தை உருவாக்க நமது மாபெரும் தலைவர்கள் எப்படி ஒற்றுமையுடன் பாடுபட்டனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரையே கொடுத்தவர்களை நினைத்து நாம் பெருமைப் படுகிறோம். அரசியல் சட்டம் மூலம், தலித், ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் ஆகியோருக்கு எப்படி உதவலாம் என்பது தான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் வலிமை மற்றும் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டில் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும்.

கருத்தொற்றுமைதான், ஜனநாயகத்தின் மாபெரும் பலம். எனவே, மெஜாரிட்டி பலத்தின் மூலம், முடிவுகளை வலுக்கட்டாயமாக திணிக்க மாட்டோம். கருத்தொற்றுமை ஏற்படுத்த பாடுபடுவோம். ‘முதலில் இந்தியா’ என்பது தான், எனது அரசின் ஒரே மதம். அரசியல் சட்டம்தான், எங்களின் ஒரே புனித நூல். அனைத்து பிரிவு மக்களுக் காகவும் இந்த அரசு பாடுபடும். இன்றைய இந்தியா, மன்னர்களுக்கும், பிரதமர்களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது. இந்த தேசத்தை கட்டி எழுப்ப அடுத்தடுத்து வந்த எல்லா அரசுகளும் தங்கள் பங்கை செலுத்தி உள்ளன. இந்த அரசு எதுவும் செய்யவில்லை, அந்த அரசு எதுவும் செய்ய வில்லை என்று சொல்ல முடியாது.

நான் சுதந்திர தினத்தன்று, டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரையில் கூட, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எல்லா அரசுகளும், பிரதமர்களும் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர் என்று தெரிவித்தேன். இதற்கு முன்பு வேறு எந்த பிரதமராவது, செங்கோட்டையில் ஆற்றிய உரையில், இந்த உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்களா எனறு எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், அப்போது மட்டுமல்ல, இந்த சபையிலும் நான் இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறேன். எனவே, நேரு உள்ளிட்ட முந்தைய தலைவர்களின் பெருமைகளை இந்த அரசு மூடி மறைக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டப்படுவதில் உண்மை கிடையாது. இந்த நாடு முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதை பாராளுமன்றத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், மக்களுக்கும் எட்ட பாடுபடுவோம்”என்று மோடி பேசினார்.

Related Posts

error: Content is protected !!