அமெரிக்கா – டூரிஸ்ட் எண்ணிக்கை கம்மி ஆயிடுச்சு!

அமெரிக்கா –  டூரிஸ்ட் எண்ணிக்கை கம்மி ஆயிடுச்சு!

அமெரிக்க என்பதே சொர்கபுரி என்பது பலரது எண்ணமாக இருக்கிறது! நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை என்பதெல்லாம் தனிக் கதை. அந்த அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா அலுவலகம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு வர்த்தக ரீதியாக வரும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. சுற்றுலா பயணிகளை விட வர்த்தக பயணிகளின் எண்ணிக்கை அதிகளவு குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் விவரம் இதோ ;

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் 6 மாதத்தை ஒப்பிடும் போது, இந்த வருடம் 4 சதவீதம் குறைந்துள்ளது. அதில் மெக்ஸிகோ பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதமாகவும் பிரிட்டன் பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதமாகவும் குறைந்துள்ளது. ஆனால் அதேசமயம் கனடா நாட்டினர் 5 சதவீதம் பேர் அதிகமாக அமெரிக்காவிற்கு வந்துள்ளனர்.

கனடா மற்றும் மெக்சிகோவை தவிர்த்து அமெரிக்காவுக்கு வந்த மொத்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் 6 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அதை விட வர்த்தக ரீதியாக அமெரிக்கா வரும் பயணிகளின் எண்ணிக்கை 9 சதவீதமாக குறைந்துள்ளது.

அதிபர் டிரம்ப் பதவி ஏற்றப்பின் மெக்ஸிகோவின் எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பப்படும் என அறிவித்தார். மேலும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பரிக்காவை சேர்ந்த சில நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்தார். இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதமாகவும் ஆப்பரிக்க நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 27 சதவீதமாகவும் குறைந்தது.

இதை தவிர தென், மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பயணிகளின் வரவும் அதிகளவு குறைந்துள்ளது. வெனிசுலா, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 சதவிதம் குறைந்துள்ளது. ஆனால் தென் கொரியா, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகளின் எண்ணிக்கை முறையே 18, 4.7, 4.2, 3.5 மற்றும் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!