அடேங்கப்பா.. அஞ்சு ஹீரோஸ்.. ஒரு படம்=அதிர வைக்கும் பாலா!

அடேங்கப்பா.. அஞ்சு ஹீரோஸ்..  ஒரு படம்=அதிர வைக்கும் பாலா!

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநர் என்று பெயரெடுத்தவர் பாலா. சீயான் .விக்ரம் நடித்த ‘சேது’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான பாலா தனது முதல் படத்திலேயே திறமையான டைரக்டர் என்ற அடையாளத்தை பதித்தார். ‘சேது’ படம் ஓடியதுடன், பரபரப்பாகவும் பேசப்பட்டது. அதில்தான் விக்ரம் டாப் கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். ‘சேது’ படத்தை அடுத்து பாலா, சூர்யாவை வைத்து ‘நந்தா’ படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெற்றதுடன், தமிழ் பட உலகில் ஒரு புதிய மாற்றத்துக்கான கதவை திறந்து விட்டது. பாலா, முன்னணி டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்,’ ‘நான் கடவுள்,’ ‘அவன் இவன்,’ ‘பரதேசி’ ஆகிய படங்கள் பாலாவை இந்திய அளவில் அவரை பிரபலமாக்கின.
cine nov 17
இதையடுத்து பாலாவின் படங்கள் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனிடையே இவர் இயக்கத்தில் தற்போது சசிகுமார் நாயகனாக நடிக்கு ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் 1000வது படம் இது. விரைவில் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து பாலா 5 கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதில் விஷால், ஆர்யா, அரவிந்தசாமி, அதர்வா, ராணா ஆகிய ஐந்து பேரும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது..இதன் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்குகிறதாம். இதற்கு முன்பு தமிழில், ‘கின்னஸ்’ சாதனைக்காக உருவான ‘சுயம்வரம்’ என்ற படத்தில் மட்டுமே பல கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள். அதன் பிறகு 5 பிரபல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் தமிழ் படம் இதுதான். மிக பிரமாண்டமான முறையில் தயாராகப் போகும். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின் றதாம். தமிழகத்தின் முன்னணி நாயகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதால், தற் போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று அவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!