ஸ்டேட் பேங்கில் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

ஸ்டேட் பேங்கில் ஜாப் ரெடி!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இளைஞர்களுக்கான பரிசாக 8,301 கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் தமிழகத்துக்கு 346 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மேலும் Backlog காலியிடங்கள் ஆக 52 இடங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன. Junior Associate – Customer Support and Sales என்ற பெயரில் இவை நிரப்பப்பட உள்ளன. எதிர்காலத்தில் பணியில் சேர்ந்த பின் சேல்ஸ் போன்ற பணிகளை பார்க்க மாட்டோம் என ஊழியர்கள் கூறக் கூடாது என்பதற்காக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தகுதிகள்: வயது – 2018 ஜன., 1 அடிப்படையில் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப் படும்.

கல்வித்தகுதி: பட்டப் படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டு பணிக்காக தேர்வு செய்யப்படுவீர்கள். இவற்றில் தகுதி பெறுபவர்கள் மொழித் தேர்வு ஒன்றிலும் தகுதி பெற வேண்டும்.

பிரிலிமினரி தேர்வு: English Language, Numerical Ability, Reasoning Ability ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் நடத்தப்படவுள்ள இந்தத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 100. மொத்தம் 100 கேள்விகள். தலா 20 நிமிடங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கால அளவு நிர்ணயிக்கப் பட்டுள்ளது

*இதில் ஒவ்வொரு பகுதியிலும் தனித் தனியாக இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற வரையறை இல்லை
மெயின் தேர்வு: General/Financial Awareness, General English, Quantitative Aptitude, Reasoning Ability and Computer Aptitude ஆகிய நான்கு பகுதிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும். தலா 50 கேள்விகள் இடம்பெறும். இப்பகுதிகளுக்கான கால அளவு முறையே 35, 35, 45, 45 நிமிடங்களாகும். மொத்தம் 160 நிமிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக கால வரையறை உண்டு. தவறான பதில்களுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் விதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் ரூ. 600.

தேர்வு எப்போது: பிரிலிமினரி தேர்வு மார்ச் அல்லது ஏப்ரலில் நடத்தப்படும். மெயின் தேர்வு உத்தேசமாக மே 12ல் நடத்தப்படும்.

கடைசி தேதி : 2018 பிப்., 10.

விபரங்களுக்கு : ஆந்தைவேலைவாய்ப்பு