ஸ்டாப் செலக்சன் கமிஷன் – தேர்வு அறிவிப்பு – AanthaiReporter.Com

ஸ்டாப் செலக்சன் கமிஷன் – தேர்வு அறிவிப்பு

இதன் மூலம் 3,259 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. லோயர் டிவிஷன் கிளார்க் / ஜூனியர் சார்ட்டிங் அசிஸ்டன்ட் பிரிவில் 898 இடங்களும், போஸ்டல் அசிஸ்டன்ட்/ சார்ட்டிங் அசிஸ்டன்ட் பிரிவில் 2,359 இடங்களும், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டரில் 2 இடங்களும் என மொத்தம் 3,259 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

2018 ஆகஸ்ட் 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 2018 ஆகஸ்ட் 1-ம் தேதி அடிப்படையில் பிளஸ் 2 அளவிலான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய் ஆகும்.

ஸ்டேட் வங்கிக் கிளை மூலமோ அல்லது நெட் பேங்கிங், கிரெடிட் டெபிட் கார்டு வாயிலாகவோ செலுத்தலாம். பெண்கள் மற்றும் எஸ்.சி.,/ எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை