ரசீது இல்லாமல் வாங்கிய தேர்தல் நிதி: ஆம் ஆத்மி கட்சியை சிக்கலில் மாட்டிய ஸ்டிங் ஆப்ரேஷன்! – AanthaiReporter.Com

ரசீது இல்லாமல் வாங்கிய தேர்தல் நிதி: ஆம் ஆத்மி கட்சியை சிக்கலில் மாட்டிய ஸ்டிங் ஆப்ரேஷன்!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 வேட்பாளர்களிடம் இணையத்தள ஊடகம் ஒன்று, ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’ஒன்றை மேற்கொண்டது. அப்போது கெஜ்ரிவால் வேட்பாளர்கள் ரசீது தராமல் நிதி பெற்றுக்கொண்ட.காட்சிகள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி நிதி திரட்டுவதில் முறைகேடு செய்ததாக் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.அதே சமயம் வெளியான ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோ காட்சிகள் போலியானவை என்றும், அதன் உண்மையான எடிட் செய்யப்படாத வீடியோ பதிவு காட்சிகளை சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனம் இன்று மாலை 3 மணிக்குள் தங்களிடம் ஒப்படைத்தால் அதை ஆராய்நது உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிததுள்ளார்.
Arvind Kejiriwal
இந்தியா தலைநகர் டெல்லியின் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 4 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கூடவே தே மூ தி கவும் பதினொரு தொகுதிகளில் போட்டியிடுவது நினைவு கூற்த்தக்க்து.

இதற்கிடையில் இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கணிசமான இடங்களை கைப்பற்றலாம் என சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால், தனது பெயரை தவறாக பயன்படுத்தி தேர்தல் நிதி திரட்டியதாக அன்னா ஹசாரே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார். உடனே இக்குற்றச்சாட்டை மறுத்த கெஜ்ரிவால் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் போட்டியிலிருந்தே விலகிக் கொள்வதாக அவேசமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி புது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 வேட்பாளர்களிடம் இணையத்தள ஊடகம் ஒன்று, ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’ ஒன்றை மேற்கொண்டது. அப்போது அந்த வேட்பாளர்கள் ரசீது தராமல் நிதி பெற்றுக்கொண்ட.காட்சிகள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி நிதி திரட்டுவதில் முறைகேடு செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதில் அப்செட்டாகிப் போன கெஜ்ரிவால் ‘தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தன் கட்சி வேட்பாளர்களை சதி செய்து புகார்களில் சிக்க வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே புகாரில் சிக்கிய வேட்பாளர்களில் ஒருவரான சாஜியா இல்மி போட்டியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதாவதுதன் மீதான குற்றச்சாட்டை பொய் என்று நிரூபித்த பிறகே தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் அக்கட்சிக்கு பெரும் தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது

அதே சமயம் மேற்கூறிய ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோ காட்சிகள் போலியானவை என்றும், அதன் உண்மையான எடிட் செய்யப்படாத வீடியோ பதிவு காட்சிகளை சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனம் இன்று மாலை 3 மணிக்குள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அது போலியானது என்று நாங்கள் முடிவு செய்ய வேண்டியது வரும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அந்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ லிங்க் இதோ::

http://www.youtube.com/watch?v=WtjOj2kM_4k

Will sting operation hurt Arvind Kejriwal’s Aam Aadmi Party in Delhi Assembly elections?
*******************************************************************
With less than two weeks to go for the Delhi Assembly Elections, Arvind Kejriwal’s Aam Aadmi Party (AAP) has suffered a serious credibility crisis with a sting operation showing party leaders accepting cash donations without proper verification. Media Sarkar, which conducted the sting operation, claimed that several AAP leaders readily agreed to extend their support for recovery of money from individuals and getting land deals done, in return of donations in cash to AAP.