வெள்ளை வேன் கதைகள்! – AanthaiReporter.Com

வெள்ளை வேன் கதைகள்!

குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறது இலங்கை அரசாங்கம். இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் “காணாமல் போகடிக்கப்பட்ட” தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக் கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்கோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர்.


சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளலாவிகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும் கொலைகார இலங்கை அரசுக்கு யாரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன.“White Van Stories / வெள்ளை வேன் கதைகள்” காணாமல் போன உறவுகளின் 90 நிமிட விஷுவல் பெட்டிஷன்.

கடுமையான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பயணம் செய்து, முஸ்லீம், சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்திந்து, கொரில்லா படப்பிடிப்பு நுட்பங்களுடன், உயிராபத்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெள்ளை வேன் கதைகளை எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் லீனா மணிமேகலை.

காமன்வெல்த் மாநாட்டையொட்டி சேனல் ஃஃபோர் தொலைக்காட்சியில் சிறப்பு ஒளிபரப்பை பெற்று,லண்டனில் வெளியிடப்பட்ட இந்தப் படம் முதன்முதலாக இந்தியாவில், சென்னையில் திரையிடப்படுகிறது.

இணைய தளம் : http://www.whitevanstories.com/
சுட்டிகள் : Facebook page: https://www.facebook.com/pages/White-…
Twitter: https://twitter.com/whitevanstories
Promo 1: http://www.youtube.com/watch?v=aeDjbLOrP6M
Promo 2:http://www.youtube.com/watch?v=ClQdu81jc0s
Promo 3: http://www.youtube.com/watch?v=sT-Zd3Hu3T0
With John Snow : http://www.youtube.com/watch?v=YlBnLMGglQ0
Reading for Amnesty International : http://www.youtube.com/watch?v=38runisTOC0&feature=youtu.be
Channel Four News Feature on White Van Stories: http://www.youtube.com/watch?v=-E12gULGChU&feature=c4-overview&list=UUTrQ7HXWRRxr7OsOtodr2_w