விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு – AanthaiReporter.Com

விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது.
vazhikatti airforce -jan 1
ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பட்டப் படிப்பை முடித்தவர்களும், பி.டெக்., படிப்பை 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.

டெக்னிகல் பிராஞ் 58 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு 18 முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற போதும், ஏரோனாடிகல் பிரிவில் குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் மட்டுமே இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க முடியும். விபரங்களை இணையதளத்தில்( http://indianairforce.nic.in/)காண்க.

கிரவுண்ட் டியூடி பிராஞ்ச் 46க்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 27 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். இதில் அட்மினிஸ்ட்ரேஷன் அண்டு லாஜிஸ்டிக்ஸ், அக்கவுண்ட்ஸ், எஜூகேஷன் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன. இவற்றிக்கு குறைந்த பட்சம் பட்டப் படிப்பும், வேறு சில சிறப்பு தேவைகளும் உள்ளன. விபரங்களை இணையதளத்தில் (http://indianairforce.nic.in/)காணலாம்.

இந்தப் பதவிகள் பாதுகாப்புப் படை சார்ந்தவை என்பதால் குறைந்த பட்ச உயரம், உயரத்திற்கேற்ற எடை, மார்பளவு, மார்பு விரிவடையும் தன்மை, கண் பார்வை மற்றும் பொது உடல் நலம் போன்ற பல்வேறு உடற் தகுதிகள் தேவைப்படும் என்பதை மனதில் கொள்ளவும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை சூலூர், தஞ்சாவூர் ஆகிய மையங்கள். நமக்கு அருகிலுள்ள மா நில மையங்களான பெங்களூரு, மைசூரு, கொச்சி, திருவனந்தபுரம் ஆகியவை.

மாதிரி விண்ணப்பம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://indianairforce.nic.in/என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.01.2014

One Comment

Comments are closed.