விஜயகாந்த் – வாசன் சந்திப்பு:காங். + தேமுதிக கூட்டணி? – AanthaiReporter.Com

விஜயகாந்த் – வாசன் சந்திப்பு:காங். + தேமுதிக கூட்டணி?

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட இருவரும் 45 நிமிடம் முக்கிய ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து காங்கிரஸ் தேமுதிக கூட்டணி ஏற்படும என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரப்ப பட்டு வருகிறது..
jan 1 -vijaykanth and vasan
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.அந்தக் கட்சியை கூட்டணியில் சேர்க்க திமுக, பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீரென வந்தார். விஜயகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.அப்போது திரைப்படத்தில் புதிதாக நடிக்கும் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனுக்கு வாசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து வாசனும் விஜயகாந்த்தும் சுமார் 45 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.இது குறித்து தேமுதிக தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இருவரது சந்திப்பையும் உறுதிப்படுத்தினர். அதேநேரம், ஜி.கே.வாசன் தரப்பில் தொடர்பு கொண்டபோது, புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்க்களாம்!