லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com

லட்சுமி விலாஸ் வங்கியில் பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு!

தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் கரூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் லட்சுமி விலாஸ் வங்கி எல்.வி.பி., என்ற பெயரால் அறியப்படுகிறது. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீன தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இதில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2018 டிச., 2க்கு பின்னரும் 1998 டிச., 1க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.700.

கடைசி நாள் : 2018 டிச., 30.

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு