மனதில் உள்ள பிரச்னைகளையும் தீர்க்கும் மருத்துவம் – அக்குபஞ்சர் – AanthaiReporter.Com

மனதில் உள்ள பிரச்னைகளையும் தீர்க்கும் மருத்துவம் – அக்குபஞ்சர்

உடலில் ஏற்படும் நோயை மட்டுமன்றி, கடன், வாக்குவாதம், போன்ற தொல்லைகளால் வரும் கடும் மன உளைச்சலையும் தீர்க்கும் முறைதான் அக்குபஞ்சர் மருத்துவம்.

இதை பொறுத்தவரை நோயைப் பரிசோதிப்பதற்கு 12 உறுப்புகளின் செயல்பாடுகள், இரண்டு கைகளின் நாடி வழியாகப் பார்க்கப்படுகிறது. யின் மெரிடியன் என்ற வகைக்குக் கீழ் வரும் இதயம், கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகளை இடதுகை நாடி வழியாகப் பரிசோதிப்பார்கள்.

Image result for acupuncture

அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பஞ்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல் என்பதாகும். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை.

இதயத்துக்கு ஜோடியாகச் சிறுகுடல், கல்லீரலுக்கு ஜோடியாகப் பித்தப்பை, சிறுநீரகத்தின் ஜோடியாகச் சிறுநீர்ப்பை என ஆறு உறுப்புகளின் செயல்பாடுகள் கணிக்கப்படுகின்றன. வலது கையைப் பொறுத்தவரை, நுரையீரல் (பெருங்குடல்), மண்ணீரல் (வயிறு), இதய உறை-சிரை ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் அவற்றின் ஜோடி உறுப்புகளாக முறையே பெருங்குடல், வயிறு மற்றும் இடுப்பு வளையம், நெஞ்சுக்கூட்டுப் பகுதி, அடிவயிறு ஆகியவற்றின் நிலைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில்தான் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குகின்றனர். உடலில் அதிகப்படியான உயிராற்றல் இருந்தால் நோயும் வலியும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. குறைவான ஆற்றல் இருந்தாலும் நோய், வலி ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.

அக்குபஞ்சர் மருத்துவம் இறை மருத்துவம் ஆகும். நாள்பட்ட ஆஸ்துமா, இருமல், நரம்பு தளர்ச்சி, மூட்டுவலி, சர்க்கரை நோய் உட்பட அனைத்து நோய்களையும் சரி செய்யலாம். ஆரம்ப நிலையில் இருந்தால் உடனடியாக குணமடைய செய்து விடலாம். இந்த மருத்துவ முறையில் நோய் முற்றிலும் குணமடைகிறது என்பது உண்மை.

இந்த சிகிச்சை முறை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு புள்ளியும் சக்தி ஊக்கிகளாகதான் அமைந்துள்ளன. அதை சரியானபடி கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நலம் பயக்கும். அதேபோல் மனதை வருத்தும் கடன் பிரச்னை, தொழில் முன்னேற்ம் இல்லாததால் மன உளைச்சல் போன்றவற்றுக்கும் சிறந்த தீர்வை அளிக்கிறது இந்த இறை மருத்துவம்.

இதை மாத்திரை மருந்துக்கு பதிலாக உபயோகித்தால் நாம் ஆரோகியாமான உடலுடன் வாழ்வது எளியது. உடலில் உள்ள நோய்களை அடக்குவது மட்டுமே மாத்திரை மருந்துகளின் வேலை. அனால் அக்குபஞ்சர், எந்த விதமான் நோயாக இருந்தாலும் அதை முற்றிலும் அழிபதற்கு முயன்றும்.