மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி! – AanthaiReporter.Com

மக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி!

“தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார்.”என்று டிராபிக ராமசாமி தெரிவித்துள்ளார்.
traffic ramasamy 29
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் பேசியபோது,”தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார்.

மேலும் இந்த கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் நான் போட்டியிட உள்ளேன்.

புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்பு கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும். தற்போதுள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சிகளின் முக்கிய நோக்கமாகும்.

இது நடைமுறையில் சாத்தியமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மக்களிடம் இந்த 2 கட்சிகளின் நல்ல எண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் எங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.” என்று தெரிவித்தார்