போனில் மருத்துவ ஆலோசனை வேண்டுமா? அழையுங்கள் – 104 – AanthaiReporter.Com

போனில் மருத்துவ ஆலோசனை வேண்டுமா? அழையுங்கள் – 104

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை இனி ‘104’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..
Helpline.Services. Phone on medical kit
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,”பொதுமக்கள் இனிமேல் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை ‘104’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இதற்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடநாடு முகாமிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது