பொன்மகன் சேமிப்பு திட்டம்: முதிர்வு தேதிக்கு முன்னாடியே பணத்தை வாங்கிக்கலாம்! – போஸ்டல் அறிவிப்பு – AanthaiReporter.Com

பொன்மகன் சேமிப்பு திட்டம்: முதிர்வு தேதிக்கு முன்னாடியே பணத்தை வாங்கிக்கலாம்! – போஸ்டல் அறிவிப்பு

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி சென்னை யில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கிட்டத்தட்ட பிபிஎஃப் போல்தான், தற்போது முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் எடுக்க விரும்பினால், குறைந்தபட்சம், பணம் செலுத்திய தொடக்க தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ponmagan feb 18
இதுகுறித்து தபால் துறை அதிகாரிகள் m “8.7 சதவீதம் வட்டி 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடும், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவே வந்து பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்த பட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் முதலீடாக ரூ.1½ லட்சம் வரை ஒரு ஆண்டில் சேமிக்கலாம். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கணக்கு தொடங்கிய உடன் 3-வது ஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது.

கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக் கொள் ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாக, பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கு உரிய காரணத் தையும் கூற வேண்டும். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது”இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.