பெற்ற மகளை கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவன் கைது -மும்பை பகீர்! – AanthaiReporter.Com

பெற்ற மகளை கற்பழித்து திருமணம் செய்ய முயன்றவன் கைது -மும்பை பகீர்!

எனது தந்தை என்னை 15 வயது முதல் கற்பழிக்க தொடங்கினார். உடல்கூறியல் கல்வி கற்று தருவதாக ஏமாற்றி கற்பழித்தார். இது தொடர் கதையாகி விட்டது.தற்போது எனது தந்தை, எனது குழந்தைக்கும் தந்தையாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மும்பையில் ஒரு பெண் கொடுத்துள்ள புகார் பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது.
nov 29 - daughter rape
மும்பை மலாடு மால்வாணியை சேர்ந்தவர் இப்ராகிம் சேக் (வயது 50). இவரது 26 வயது மகள் சமூக சேவகர் ஒருவர் உதவியுடன் மால்வாணி போலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது பரபரப்பு புகார் கொடுத்தார்.அந்த புகாரில்,”எனது தந்தை என்னை 15 வயது முதல் கற்பழிக்க தொடங்கினார். உடல்கூறியல் கல்வி கற்று தருவதாக ஏமாற்றி கற்பழித்தார். இது தொடர் கதையாகி விட்டது. இது பற்றி அறிந்த எனது தாய், தந்தையை தட்டி கேட்டார். ஆனால் அவர் தாயை அடித்து உதைத்து மிரட்டி வந்தார். என்னை மகள் என்று கூட பாராமல் கண்மூடித்தனமாக கற்பழித்து வந்ததில், எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 8 வயதாகி விட்டது.

இதுபற்றி அக்கம் பக்கத்தில் தெரிவித்தால், கொலை செய்து விடுவதாக என்னையும், எனது தாயையும் மிரட்டி வந்தார். இதனால் நாங்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசாமல் வீட்டில் முடங்கி கிடந்தோம்.

இந்த நிலையில் என்னை திருமணம் செய்து கொள்ள தந்தை முயற்சித்தார். இதுபற்றி அறிந்த எனது தாய் சமூக சேவகர் ஒருவரிடம் தெரிவித்தார். அவர் எங்களுக்கு தைரியம் கொடுத்தார். அந்த தைரியத்தின் பேரில் நான் போலீஸ் நிலையம் வந்து புகார் கொடுத்து உள்ளேன். தற்போது எனது தந்தை, எனது குழந்தைக்கும் தந்தையாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து காமகொடூரன் இப்ராகிம் சேக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 3-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் விசாரணையின் ஒரு கட்டமாக 8 வயது குழந்தைக்கு இப்ராகிம் சேக் தான் தந்தையா? என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனை செய்ய இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Mumbai: Man raped daughter for over a decade; fathered her child
******************************************************************
A 50-year-old man has been arrested for allegedly raping his daughter for nearly 11 years and fathering a child with her, police said on Thursday.The accused identified as Ibrahim Shaikh was arrested on Wednesday after the 26-year-old victim claimed in her complaint that he is the biological father of their eight-year-old daughter, they said.