புதிய ஹோன்டா 2018 ஆக்டிவா i இந்தியாவில் அறிமுகமாயிடுச்சு! – AanthaiReporter.Com

புதிய ஹோன்டா 2018 ஆக்டிவா i இந்தியாவில் அறிமுகமாயிடுச்சு!

நடுத்தர வயதினரை பெரிதும் கவர்ந்த ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா i ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஆக்டிவா i மாடல் வழக்கமான ஆக்டிவா மாடலை விட மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் ஆக்டிவா i மாடல் ஸ்டேன்டர்டு வேரியன்ட்-ஐ விட எடை குறைவாகவும் இருக்கிறது.

இந்தியாவில் 2018 ஆக்டா i மாடல் பெண்கள் மற்றும் இளைஞர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆக்டிவா i மாடல்: கேன்டி ஜேஸி புளு, இம்பீரியல் ரெட் மெட்டாலிக், லஷ் மேக்னெட்டா மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் ஆர்சிட் பர்ப்பிள் மெட்டாலிக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

இவற்றில் டூயல்-டோன் நிறங்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ், மெட்டாலிக் மஃப்ளர் ப்ரோடெக்டர், நான்கில் ஒரு லாக், முன்பக்கம் புதிய ஹூக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை ஆக்டிவா-i மாடலில் வாகன நிறம் கண்ணாடிகள், டைனமிக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 18-லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

2018 ஹோன்டா ஆக்டிவா-i மாடலில் 109.19சிசி, 4-ஸ்டிரோக் ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8.94 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் 10-இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் முன்புறம் மற்றும் பின்பக்கம் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் மற்றும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2018 ஹோன்டா ஆக்டிவா-i மாடலின் விலை ரூ.50,010 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.