பீகாரில் பரபரப்பு – 100கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின – AanthaiReporter.Com

பீகாரில் பரபரப்பு – 100கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின

பீகாரில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து செதரியத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பீகார் பாட்னா நகரில் சுமார் 450 சிலிண்டர்களை லாரியிலிருந்து குடோனுக்கு இறக்கி வைக்கும்போது லாரியில் இருந்து இறக்கப்பட்ட இரு சிலிண்டர் கைநழுவி தரையில் விழுந்தது. லாரியின் சைலன்ஸர் மீது சிலிண்டர் பட்டதில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் லாரியிளிரிந்த நூற்றிற்கும் மேற்பட்ட சிலிண்டர்களின் மீது தீ பரவி வந்து வெடித்து சிதறியது. 

இந்த தீ அருகிலிருந்த ரசாயன ஆலைக்கும் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.