பிரிட்டன் இளவரசர் ஹாரியின் தங்க சைக்கிள் ஏலம்! – AanthaiReporter.Com

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் தங்க சைக்கிள் ஏலம்!

நியூசிலாந்து நாட்டில் உள்ள கேன்டர்பரி பல்கலைக்கழகத்துக்கு கடந்த மே மாதம் இங்கிலாந்து இளவரசர் ஹாரி(30) சென்றிருந்தபோது அங்கு பயிலும் மாணவர்கள் அவருக்கு தங்க முலாம் பூசப்பட்ட சைக்கிள் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர்.இந்த சைக்கிளை அவர் இங்கிலாந்துக்கு கொண்டு வரவில்லை. எனினும், தனக்கு பரிசளித்து கவுரவித்த மாணவர்களை மகிழ்விப்பதற்காக அதை தொட்டுப் பார்த்து, சைக்கிளின் அருகே மாணவர்களின் அருகில் நின்று புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்தார்.
gold cycle hilari
நியூசிலாந்தை சமீபத்தில் பதம்பார்த்த ‘வனுவாட்டு’ புயலால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு பரிசாக அளிக்கப்பட்ட இந்த சைக்கிளை ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளவரசர் ஹாரியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை அரசின் பேரிடர் நிவாரண நிதியில் சேர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.