பிராந்தி டேஸ்டைத் தரும் விஸ்கி – குடிமகன்களை கவரும் டாஸ்மாக் யுக்தி! – AanthaiReporter.Com

பிராந்தி டேஸ்டைத் தரும் விஸ்கி – குடிமகன்களை கவரும் டாஸ்மாக் யுக்தி!

டாஸ்மாக் கடைகளில் பிராந்தி சுவை, மணத்துடன் புதியரக வெளிநாட்டு விஸ்கியும், எக்ஸ்ட்ரா லார்ஜ் தர முத்திரையுடன் பிராந்தியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் தற்போது லீராய் என்ற பெயரில் பிராந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்ற தரப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றால் கொடுக்கும் பணத்திற்கு மிச்சமாக போதையும், தரமும் இருக்கும் என்பது பொருளாம். பிராந்திக்கு பெயர் பெற்ற பிரான்ஸ் கோனியாக் நகரிலிருந்து பிராந்திக்கான மூலப்பொருளை வரவழைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி கொண்ட பாட்டில் 130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
sep 21 - chennai tasmac van
இதேபோல் இந்தியன் சேலஞ்ச் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விஸ்கியில் பிராந்தியின் சுவை, மணம், கலருடன் (மஞ்சளுக்கு பதில் பிஸ்கட் கலர்) விற்பனை செய்யப்படுகிறது. இது விஸ்கிக்கு பெயர் பெற்ற ஸ்காட்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி மூலப்பொருள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. ஸ்காட்சுக்கு நிகரான மது என்றாலும் இந்தியாவில் தயார் ஆவதால் இம்மது 180 மில்லி பாட்டில் ரூ140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அது மட்டுமின்றி வோட்காவில் ஆப்பிள், ஆரஞ்ச், ஸ்ட்ராபெர்ரி ஆகிய நறுமணங்களை தொடர்ந்து சாக்லெட் மணத்துடன் கூடிய வோட்காவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் மூமென்ட் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் இது 180 மில்லி ரூ140க்கு விற்பனையாகிறது. இது குடிமகன்களை குதூகலப்படுத்தி உள்ளது.