பார்லிமெண்ட் தேர்தலில் செலவிடப்பட்ட செலவுகள் எம்புட்டுன்னு தெரியுமா? – AanthaiReporter.Com

பார்லிமெண்ட் தேர்தலில் செலவிடப்பட்ட செலவுகள் எம்புட்டுன்னு தெரியுமா?

இந்தியா முழுவதும் மக்களவைத் தோதல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்தத் தோதலில் 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் செலவிடப்பட்ட செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள் சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், சராசரியாக வாக்கு ஒன்று ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவைத் தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தோதலில் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில், 2019ம் ஆண்டு தோதலில் அது இரட்டிப்பாக ரூ.60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

தற்போது வரை நடைபெற்ற தோதல்களிலேயே 2019 மக்களவைத் தோதலுக்குத் தான் அதிகம் செலவழிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தோதலுக்காக செலவிடப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடியில், தோதல் ஆணையம் ரூ.10 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.