பாகிஸ்தான் டிவியில் பாலியல் குறித்தத் தொடர்! – AanthaiReporter.Com

பாகிஸ்தான் டிவியில் பாலியல் குறித்தத் தொடர்!

பாகிஸ்தானில் பாலியல் சந்தேகங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று, தொலைக்காட்சியில் எதிர்ப்பு இன்றி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் கராச்சி (Karachi) நகரில் இருந்து ஒளிபரப்பாகும் ஹெல்த்.டிவி (Health TV) என்னும் தொலைக்காட்சியில் நதிமுதின் சித்திக் (Nadimuddin Siddiqui) என்ற மருத்துவர் பாலியல் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.
pak tv taboo_M
இதுபோன்ற விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சம்மதிக்க மாட்டார்கள் என பாகிஸ்தானை பொறுத்தளவில் இருந்த கருத்து தற்போது மாறியுள்ளது.இதுகுறித்து நதிமுதின் கூறுகையில், எனது நிகழ்ச்சி பாலியல் தொடர்பானதாக இருந்தாலும் கண்ணியத்தோடு நடத்தி வருகிறேன். இந்த நிகழ்ச்சி பற்றி சர்ச்சை வெடித்துவிட கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.

எனவே பாலியல் நோய்களும், அதை தவிர்க்கும் வழியையும் மட்டும் தான் நான் கற்றுத் தருகிறேன் என்றும் இதனை இஸ்லாமிய மதத் தலைவர்களும் வரவேற்கவே செய்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.இதற்கிடையே இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கருக்கலைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்க, இஸ்லாமிய மதத் தலைவர் சாகித் மதானி (Shahid Madani) வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

 

வீடியோ பார்க்க:https://www.youtube.com/watch?v=78slN10iKBA