பட்ஜெட் அல்வா : நிர்மலா சீத்தாராமனுக்கு கிண்டும் வேலை இல்லை! – AanthaiReporter.Com

பட்ஜெட் அல்வா : நிர்மலா சீத்தாராமனுக்கு கிண்டும் வேலை இல்லை!

எதிர் வரும் ஜூலை 5-ம்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டைதாக்கல் செய்யவுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அல்வா கிண்டும் பாரம்பரியத்துடன் மத்திய பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆனால் வழக்கமாக அமைச்சர் வந்து ஆவி பறக்கும் அல்வா-வில் முத்தாய்ப்பாக சில பல பதார்த்தங்களை போட்டு கிண்டுவதர்கு மாறாக இம்முறை முழுக்க கிண்டி மூடி வைத்த அல்வா கடாயைத் திறந்து பரிமாறினார் நிர்மலா சீத்தாராமன்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஆவ ணங்களை அச்சிடும் பணி தொடங்கும்போது அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்குவது வழக்கம். வரும் 1ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் உரை உள்ளிட்டவற்றை அச்சிடும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அச்சகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்று அல்வா சாப்பிட்ட பணியாளர்கள் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை வெளி உலகத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையிலிருந்து மத்திய நிதியமைச்சர் மற்றும் ஒரு சில மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பட்ஜெட் ரகசியங்கள் வெளியாகக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இன்று தயாரிக்கப்பட்டு, ரெடியான அல்வா அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதையடுத்து 2019-20ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அச்சடிக்கும் பணி தொடங்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும் என்பதும் இப்பட்ஜெட் முன்ன்ரே தயாரிக்கவிட்டது என்று வரும் தகவல்களும் குறிப்பிடத்தக்கது.